Sunday, October 17, 2010

காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

ஆசை...! ஆசை...!

உயிரான காதலனே!
உன் தோளினில் சாய்ந்து
உன் மொழிகளை
ரசித்திட ஆசை...!

மழைத்தூரலில் நடக்கையில்
உன் ஒரு விரல் பிடித்து
ஒரு குடையில்
நடந்திட ஆசை...!

வயல்வெளியில் நடந்திடுகையில்
உன் கைகளை இறுகபிடித்து
வயல்வெளி தென்றலை
முகர்ந்திட ஆசை...!

சிறிய கோபத்தின் ஊடலில்
சமாதானமாய் பேசிடும்
உன் கொஞ்சும் வார்த்தைகளை
கேட்டிட ஆசை...!

உன் மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'நீயே' உலகமென்று
உறங்கிட ஆசை...!

Saturday, October 16, 2010

மருதாணி... நட்பு!

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

அழகாய்,அழகழகாய்...
திட்டம் தீட்டி
கைகளில் வரைந்து
அதிகமாய் சிவந்தால்

நல்ல கணவர் கிடைப்பாறாம்...
என்றே! கிண்டல்,கேலிச்
சிரிப்பு ஓய்ந்து
தூக்கம் கண்ணை சொருகினால்

மருதாணி களைந்து விடும்...
பயத்தில்.....
அரைகுறை தூக்கம்
தூங்கி..

விடிகாலையில்..
செக்கச் செவ்வென!
சிவந்த கைகளும்...!
சிவந்த கண்களும்...!

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!

எப்படி பிரிந்ததாகும்...!

உன் அன்பு மொழிகள் என்னிடம்!
உன் சிரிப்பு மொழிகள் என்னிடம்!
உன் குறும்பு மொழிகள் என்னிடம்!
உன் கோப மொழிகள் என்னிடம்!
உன் கொஞ்சும் மொழிகள் என்னிடம்!
உன் ஆறுதல் மொழிகள் என்னிடம்!
உன் அசடு மொழிகள் என்னிடம்!
எல்லாமே! என் நினைவுகளாக!
எப்படி உன்னை பிரிந்ததாகும்...
என் மனம் உன்னிடமே!

Wednesday, October 13, 2010

எங்கே! நீ! எங்கே!

என்னவனே!
என் உயிர் என்னிடமில்லை
என்றறிந்த தினம் முதலே!
எங்கிருக்கிறாய் என்றே! தேடுகிறேன்!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

என் கண்களில் நீ தென்படவில்லை..!
என் கனவில் உனக்கு உருகொடுக்கிறேன்!
விடிந்ததும் உன் உருவமும் மறக்கிறது!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

உன் குரலுக்கு இசையினை மீட்டி..
கேட்டு கேட்டு ரசிக்கிறேன்!
இன்பமாய் ஆழ்க்கையில் கற்பனை
இசைஎன்றே! அறிகிறேன்..!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

அன்பின் அமுத சுரபியே!
அறிவின் உச்சமே!
புன்னகையின் சொந்தமே!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

தேடி வரும... வரன்களில்
உன்னையே! தேடுகிறேன்...!
என் மனதை கொள்ளையடித்த
என் செல்லமே!
நீ மட்டும் இல்லை...

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

எனக்காக பிறந்தவனே!
எனக்காக வருவாய்...!
எனக்கே! எனக்கே!
வருவாய் அன்பே!

என் கனவு நீயே!
என்று வருவாய் என்றே!
காத்திருக்கிறேன்...!
விரைவில் என்னை
சேர்ந்திடுவாயே!
என் கண்ணின்மணியே!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைக்கிறேன்!

இவை புதிய மாற்றங்கள்...!

ஒரு வரி விடாமல் படிக்கும் புத்தகத்தில்
ஒரு வரி கூட படிக்க முடியவில்லை
சிரிக்கிறது புத்தகம்...

அதிர,அதிர நடக்கும் என் கால்கள்
அன்னமோ! என்று பிறரை
கேலி பேச வைக்கிறது இன்று...

தோழிகளுடன் கைகோர்க்கும் கைகள்
தோழிகளை விட்டு தொலைவில்...நளினமாய்
துப்பட்டாவின் நுனியை சுற்றுகிறது...!

குறும்பு ,கேலிச் சிரிப்பு சிரிக்கும் முகம் இன்று
மனதின் நாணத்தால் பைத்தியமோ! என்று
பிறர் பார்க்க தானாய் புன்னகை பூக்கிறது!

ஏன் இந்த புதிய மாற்றங்கள் எனது உயிரே!
என்ன மாயமோ! மந்திரமோ!
என் மனதில் நீ நுழைந்த ரகசியமோ!

தந்திரக்காரா...!

தந்திரக்காரா...! தந்திரக்காரா...!
என் மனதை
உன் பின்னால் ....
சுற்ற விட்டு
ஒன்றும் அறியாமல்
இருக்கிறாயே!
நியாயமா...!

Monday, October 11, 2010

என்னை மாற்றினேன்..!

என்னவனே!
உனக்காக என்னை மாற்றினேன்!
உன் மனதுக்கேற்ற மரகதம்மாயிருக்க ..!

ஆனால்,
'நீ' இல்லாத இந்த வாழ்க்கை சொல்கிறது...!
அடி பைத்தியக்காரி...

'நீ' அவனுக்காக குனிந்து போனாய்...
காதல் உன் அறிவை மறைத்ததால்...
இன்னமும் 'நீ' நிமிரமுடியவில்லையே!
என்று...!

சூன்யமான வாழ்க்கை...

உன் மீதுள்ள காதல் தான்..
என் வாழ்க்கையின் இடைஞ்சல்
என்றெண்ணி...

காதல் எண்ணத்தை விட்டேன்...!
ஒரு நொடி தான்...

என் உணர்ச்சிகள் மடிந்து...!
வாழ்க்கை சூன்யமானது...!

Wednesday, October 6, 2010

நவீனமான தவறுகள்... ஏனோ? இளைய பட்டாளமே!

இளைய பட்டாளங்களே!
இளமையின் முருக்கில்...
குறும்பு செய்திடும் வயது தான்...
குறும்பில் தவறுகள் ஏனோ?
தவறுகளில் நவீனத்தை
கலந்து கலாச்சாரத்தை
காணாமல் செய்துவிடுவீர்களோ!

பெண் விடுதலை என்பதை
ஆடை விடுதலை என்றே!
தவறாக சிலர் எடுத்துவிட்டார்களே!
கையில்லாத சட்டையும்...
குட்டை பாவாடையும்...
கைகுட்டையில் ஆடையணிந்து
கண்ணியத்தை குறைத்து
பெண்மையை தாழ்த்துவது ஏனோ!

அலைபேசி பட்டி, தொட்டி
எங்கும் அலைகிறது...!
எவ்விடத்திலும் தொடர்பு
கொள்ள கண்டறிந்தது..!
எட்ட உறவை
கிட்ட நிற்க்கச் செய்யும்...

சில இளைய படைகளுக்கு
ஆபாச எஸ்.எம்.எஸ்...
ஆபாச வீடியோ...
என்றே! தவறுகளின்
சிறிய பெட்டகமாக ஆகிவிட்டதே!

பேருந்து நெரிசலில்
ஆடை சரிவதையும்...
குனிந்து கோலம்
போடும் பெண்களையும்...
சிறிது கவனக்குறைவால்
ஆடை விலகிடும் பெண்களையும்...

அலைபேசியில் படம்பிடித்து...
உடனுக்கு உடனே உலகம்
முழுதும் பரப்பிடும்
தொலை தொடர்பு சாதனம்
தொல்லைத்தொடர்பு சாதனமே!

எங்கேயோ? பெண்களின்
அலைபேசி எண்...
இணைய முகவரி பெற்று
ஹாய் சொல்லி ஆரம்பித்த நட்பில்
மெல்ல, மெல்ல ஆபாச
வார்த்தைகளை அனுப்பிவிடுவது...

காதலும் சொல்லி...
விளையாட்டு காதல் என்றே!
வீணாய் மனதை காயப்படுத்துவது...
நல்லவர்கள் போல் நடித்தே!
காணாமலே காதல் சொல்லி...
கண்டபின் காமக்
களியாட்டம் நடத்துவது...
ஏன் இளைஞர்களே!

வெட்டலும், ஓட்டலும்
சாதாரணமாகிவிட்டது...!
கண்ணியமிக்க பெண்ணின்
கௌரவத்தை சிதைக்க...
கணினியில் காமப்படத்தில்
முகத்தினை பதித்து
இணையத்தில்...
உலவ விடும் தவறில்

மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்
மானங்கெட்ட...!
சில இளைய
சமுதாயம் திருந்திடுமோ!

அன்று... இன்று அவன்...!

அன்று... அவன்...!

என் நெஞ்சத்தில் 'நீ' என்றான்!
அவளும் மயங்கினால்...
என் நெஞ்சத்திலும் 'நீ' என்றாள்!

இன்று... அவன்...

என் மஞ்சத்தில் வேறொருத்தி என்கிறான்!
என் இதயத்தில் என்றுமே 'நீ' என்கிறாள்!
மஞ்சத்தில் இருப்பவளே!
என் நெஞ்சத்தில் என்கிறான்...

இவளோ! திருந்திவிடு என்றே!
கண்ணீர் விடுகிறாள்...!
திருந்தவில்லை காமப்பிசாசு
இவள் நெஞ்சத்திலிருந்து

அவனை அகற்றவே!
இவளின் உறுதி...!
அன்பின் மிகுதியில் அகற்ற
முடியாமல் அவன் திருந்தவே
காத்திருக்கிறாள்..

பிறப்பிடம்...! முடிவிடம்...!

கவிதையின் பிறப்பிடம்...
காதலோ...!
காதலின் முடிவிடம்...
கல்யாணமோ...!

கவிதை வாழ்கிறது!
காதல் தோல்வியில்...!
காதல் முடிவுபெறுகிறது!
கல்யாணத்தில்....!

ஏனோ...!....?

என் இதயத்தை திருடி விட்டு
அவன் நினைவுகளை மட்டும்
விட்டு சென்று விட்டான்...!
அவன் நினைவுகளை....
சுமக்கும் சுகம் சுகம்தான்...

நிறைவேறாத அவனின்
நினைவுகளை....
கனவாய் சுமந்திடும் போது...
கண்கள் கண்ணீரை
பொழிவது ஏனோ...!...?

Saturday, October 2, 2010

என் மனமே! தூது....

அன்பே! உனக்கு
என் மனதை சொல்ல
காற்றை அனுப்ப எண்ணினேன்...!
காற்றில் நிறைய மாசு
கலந்து விட்டதாம்..
மாசற்ற காதல்
மாசாகி விட்டால்...
என்ன செய்வேன்!

ஆற்று நீரில்
என் அன்பினை
அனுப்ப எண்ணினேன்...!
ஆற்றில் சாயநீர்
கலக்கிறார்கலாம்...
களங்கமில்லாத காதலில்...
கறை பட்டுவிட்டால்...
என்ன செய்வேன்!

அழகு புறாவை
என் காதல் சொல்ல
அனுப்ப எண்ணினேன்
புறாவை வறுத்து
உண்ணும் கொடியவர்
பலர் உள்ளனராம்...
நல்ல காதல் நம் காதல்
நாசம் செய்துவிட்டால்
என்ன செய்வேன்!

என் மனதையே!
தூதாக அனுப்பிவிட்டேன்
கண்களை மூடி...
உணர்ந்து பார்
என் மனது
உனக்கு புரியும்...
உயிரானவனே!

ஆட்டோகிராப்....

அன்பே! காதலின் பெயரில்
என் இதயத்தில் 'நீ'
எழுதிய மொழிகளை
என் தோழிகள் அவற்றை
கீறல்கள் மற என்கிறார்கள்...

அவர்களுக்கு தெரியவில்லை
அவற்றை நான்... எப்படி
மறப்பேன் என்று...!
எனக்கு அவை
உன் ஆட்டோகிராப் அல்லவா...!

போற்றுவோர் போற்றட்டும்... தூற்றுவோர் தூற்றட்டும்...

நாம் மட்டுமே! நம் கையில்
நம்பிக்கையாய்... தன்னம்பிக்கையாய்...
இருந்திடு மனிதனே!

முகஸ்துதி பாடி
முதுகுக்கு பின்னால்...
குத்துவோரும் உள்ளனரே!

பொறாமை தீயில்
வெந்து பொய்
பல சொல்லி நோகடிப்பரே!

தொட்டதெற்கெல்லாம் குறை
சொல்லி கிண்டலாய்
சிரிப்பாய் சிரிப்பாரே!

நிறை மட்டும்
சொல்லி புன்னகை
பூவாய் பூப்பாரே!

எவராய் இருந்தால்
என்ன நியாயத்தை
மட்டும் ஏற்றுக்கொள்வீரே!

துதியில் மயங்காதீர்!
பொறாமையில் நோகாதீர்!
குறைசொல்லிகளால் துவண்டுவிடாதீர்!
நிறைகேட்டு ஆணவம் கொள்ளதீர்!

போற்றுவோர் போற்றட்டும்...
தூற்றுவோர் தூற்றட்டும்...
சமநிலையுடன் இருப்பீரே!

மறப்பாயா.... மன்னிப்பாயா...

அன்பே! நாம்
பிரிந்த நாளில்
உணர்ந்தேன் நான்
செய்த தவறுகளை....

தவறை உணர்ந்த என்னை!
உணர்ந்து கொண்டு
தவறுகளை மறப்பாயா...!
மன்னிப்பாயா...!