Tuesday, September 20, 2011

எப்பொழுது தருவாய்!

என் மனதில் உன்னை
வெட்ட வெட்ட தளைந்தாய்
வேரறுத்தேன்
விடாமல் தளைகிறாய்!
காதல் கனிகளை
எப்பொழுது தருவாய்!

திருடிய தித்திப்பு!

திருடிய கற்பனையில்
திகட்டாத கனவுகள்...
திரைப்பட பாடலில்
நாம் இருவரும்
காதலர்களாக!

பிரம்மனின் கிறுக்கல் என்னவோ!

பிரம்மனின் இடதுகை கிறுக்கலோ!
என் விதி என்றிருந்தேன்
அழகிய கவிதையாக உன்னை
காணும் வரையில்...

என்விதியில் நீ வந்தால்
என் சொந்தகவிதை..
நீ இல்லாமல் சென்றால்
நான் எட்ட ரசிக்கும்
என் ரசிப்புக்கவிதை...

நீ என் சொந்தகவிதையோ!
நீ என் ரசிப்புகவிதையோ!
பிரம்மனின் கிருக்கலையே!
ஆராய்கிறேன்...

Thursday, June 16, 2011

காதல் கொலையாளியல்ல!

காதல் ஜீவித்ததில்...
புதிய ஜனனம்!

காதல் நெஞ்சத்தில்...
என்றும் பரவசம்!

காதல் உள்ளுக்குள்...
உண்மையாய்...!

காதல் நினைவுகள்...
நித்தியமாய்..!

காதல் வலிகள்...
சுகமாய்...!

காதல் வாழ்வில்...
முழுதுமாய்...!

காதல் என்றுமே!
மரணிப்பதில்லை...

காதலுக்காய் ஏன்
மரணிக்கிறார்கள்...

காதல் கொலையாளியல்ல!

மரணிக்கிறது!

நட்பு எளிதாய்
காதலாகிட!
காதல் எளிதாய்
நட்பாகிட மறுக்கிறது!
மரணித்தது காதல் மட்டுமா...?...!
மரணிக்கறது நட்பும்....!

சுகமாகிறேன்!

நீ பிரிந்தும்
சுகமாயிருக்கிறேன்
என் பிரிவு உனக்கு
சுகமென்பதால்...!

சுவாசமாக! என்னை சேர்ந்திடுவாய்!

நீ விட்டுசென்ற பின்பு
விடத்துணிந்த உயிரை!
விடாமல் பிடித்துவைக்கிறேன்!
என்றாவது என் சுவாசமாக!
என்னை சேர்ந்திடுவாய்! என்று!

நிற்கதியாக! நான்!

என்னை ரசித்த பொழுதில்
ரசிப்புக்கவிதை நீ!

என்னை கொஞ்சும் பொழுதில்
கொஞ்சும்கவிதை நீ!

என்னிடம் ரகசியம் பேசியபொழுதில்
ரகசியக்கவிதை நீ!

என்னிடம் கோபத்தில் திட்டியபொழுதில்
கோபக்கவிதை நீ!

என்னை ஏமாற்றிய இப்பொழுதில்
எக்கவிதையோ! நீ!

நீயில்லாத நிற்கதியாக! நான்!

Friday, June 10, 2011

நினைவே! நிரந்தரம்!

நீயே! என் நிரந்தரமென்று!
நிரந்தரமாக! நீங்கியது ஏனோ!
நீ நீங்கினாலும்...
நிரந்திரமில்லா வாழ்வில்...
உன் நினைவுகள் மட்டுமே!
நிரந்தரமாய் நிறைகிறது!

துளிதுளியாய் தளிர்கிறாய்...!

உன் நினைவில்...
கண்ணீர் துளிக்கிறேன்!
ஈரமற்ற உன் நெஞ்சத்தை
ஈரமாக்கிடல்ல!

கண்ணீர் துளிகளில்
என் நெஞ்சத்திலிருந்து
ஒரு துளியில்லாமல்
உன்னை அகற்றிட!

ஏனோ!

நான் துளித்திடும் கண்ணீரில்
என் நெஞ்சத்தில்...
துளிதுளியாய்...
தளிர்கிறாய்!

புரியவில்லையோ!

ஊர் எதிர்ப்பு...!
உறவுகள் எதிர்ப்பு...!
உன் எதிர்ப்பு...!
உடைத்தெறிந்து
உன் காதலால்...!
உன் இதயத்தில்...!
தஞ்சமாக!
தவிக்கிறேன்!
என்னவனே!
புரியவில்லையோ!

முதிர்கன்னி!

கல்யாண சந்தையில் காலடி வைத்து
காலம் பல கடந்தும் கனிவான
கணவனுக்காய் காத்திருப்பு
கனவுகளிலே கழிகிறது காலம்

இவளின் கனவுகளை தள்ளிவிட்டு
தந்தையின் எதிர்ப்பார்ப்பில் மருமகன்
தாயின் எதிர்பார்ப்பில் மருமகன்
அண்ணனின் எதிர்பார்ப்பில் மச்சானென்று

வாழப்போகிறவளை விடுத்து இவர்கள்
வாழப்போவது போல்....
தட்டிக்களிக்கப்படும் வரன்கள்...
இவள் கனவுகள் கசந்து விட்டது

கனவினில் மணக்கோலம் கண்டு...
கண்ணீர் வடித்துக்கொண்டு...
மற்றோரின் விருப்பத்திற்க்காய்...
முதிர்கன்னியாய் இவள்...!

Monday, April 4, 2011

ஆசை சுகமானது!

அத்தனைக்கும் ஆசைப்படு!
ஆசையே துன்பமென்று...
ஒவ்வொரு ஞானியிடமும்
ஒவ்வொரு வெளிப்பாடு!

ஏதேதோ ஆசைகள்...!
என் எண்ணமெங்கும்...
நிறைவேறிடுமோ! நிறைவேறிடாதோ!
நிறைகிறது மனமெங்கும் ஆசைகள்...

நிறைவேறினால் துள்ளல்...!
நிறைவேறாவிடில் கண்ணீர்!
கண்ணீர் ஆசைகளே! அதிகம்
காணும் கனவுகளிலெல்லாம்...

நிறைவேறுமோ! நிறைவேறாதோ!
ஆசைப்படுவது!
ஆசைக்கு உருகொடுப்பது!
ஆசையின் கண்ணீர்
அனைத்தும் சுகம் தான்...

ஆசையில்லா வெறுமை மனம்
ஒரு நிமிடத்தில் அற்றுவிடுகிறது!
ஆசையிலே நிறைகிறது மனம்...
ஆசை சுகமானது!

விலை!

விலை கொடுத்து
விலையாகிடும்
வினோத பொருள்
கல்யாண சந்தையில்
மணப்பெண்!

Tuesday, March 29, 2011

வளையல்...!

வளைந்திடும் நாகரிகத்தில்
வளையாமல் வளையல்
விதவிதமாய் வளையலில்
விலகாமல் மனம்

அலமாரியெங்கும் அடுக்கினாலும்
ஆசை தீரவில்லை
ஒவ்வொரு அசைவிலும்
அழகாய் இசைக்கிறது

இசை இசைதிடும்
பெருமை அளிக்கிறது
என் ஒவ்வொரு அசைவினில்

அசையாமல் கண்டு
அடுக்கிய வளையலின்
அழகினில் ஆழ்கிறேன்

வளையளினூடே
வளைந்து செல்கிறது
அவனின் நினைவுகளும்
வண்ண கனவுகளாய்

காமநாடக காதல்

கண்டதும் காதல்...
காணாத காதல்...
கனவு காதல்...
புரிந்த காதல்...
புரியாத காதல்...

காதல் வகைகளில்
அங்கம் பிடித்திருக்கிறது
காமசுவை பருகிட
காதலின் அவமான சின்னமாய்
காம நாடக காதல்...

காமத்தின் முகவரி
காதல் சிலருக்கு
அவளின் அன்பினில்
திளைப்பது போல்
அங்கங்களை ருசித்திட
அன்பு நாடகம்

நேசத்தை நாசமாக்கிட
நாசமானவன் போட்டிடும்
நேச வேஷங்கள்
காம சுவைக்கு
காதல் துருப்புச்சீட்டு

காதலில் விழும்முன்
காதல் தேவனா!
காதல் நாடகமாடிடும்
காம தேவனா!
அறிந்து விழுந்திடுவீர்..
அழகு நங்கைகளே!

முகப்பரு

பொலிவான முகத்தில்
அழகான முத்தாய் பூத்திட்டாலும்
அழகை கெடுத்திடும் அரக்கனென்று
அமைதியில்லாமல் மனம்

அழித்திடும் முயற்சியில்
ஆயிரம் முறை தோற்றாலும்
அசராமல் அடுத்த படையெடுப்பு!

பருவ வயதில் பருவால்
அல்லோலப்பட்டாலும்
காதலில் விழுந்திட்டாயா!
சைட் அடித்தார்காளா!

என்ற தோழிகளின் சீண்டலை
மனம் நாணி
ரசித்திட மறுப்பதில்லை...!!!

Monday, March 7, 2011

திரும்பிவிடு என் மனமே!

சென்ற மனமே!
திரும்பிவிடு...

செல்லா காசாகிவிட்டது
உன் அன்பு...

திரும்பிட என்னடி
மறுப்பு!

தீராக்காதலின்
மயக்கமோ!

திறக்காத மனக்கதவின்
முன் ஏன் தவம்

திரும்பிவிடு என்னிடமே!
என் மனமே!

மறந்திடும் வழி சொல்வாயோ!

ஏமாற்றத்தின் வலி அறிந்தும்
என்னை ஏமாற்றியது ஏன்..?

மறந்துவிடு என்று சொல்லும்
முன்

மறந்திடும் வழி
சொல்வாயோ!

கோபம் வெளிப்பட மறுக்கிறது...

அன்பே!
உன் மீது கோபமும், வெறுப்பும்
உண்டாகிறது...
நான் வெறுப்பது உன் தவறுகளை
மட்டுமே!
உன்னை வெறுக்க முடியவில்லை
அதனாலோ! உன் மீது
கோபம் வெளிப்பட மறுக்கிறதோ!

விலகலும் சரியே!

காதலின் அம்சம்
புரிதல்...

புரிதல் இல்லா காதலுக்கு
ஏன் சாதல்...

புரிதல் இல்லா காதலில்
சிக்கல்

சிக்கல் தொலைத்திட
சிறந்தது விலகல்...

Wednesday, January 26, 2011

மாறிடுமோ!

ரசித்திடும் மழலை மொழியில்
வேதனை ஓலம்...
பசிக்குது காசு

யார்சொல்லிய பாடமோ!
பாட புத்தகம் சுமக்கும்
பிஞ்சு விரல்கள்...

யாசகத்திற்காக...
பாதங்களை பற்றுகிறது!

ஒடுங்கிய பாத்திரத்தில்
ஒடுங்கி விட்டது
இவர்களின் வாழ்வு!

பச்சை மண்கள்
பிச்சைக்காக கையேந்தும்
நிலை என்று மாறிடுமோ!

புதுமை காதல்!

வலையில் வலை விரித்து!
அகப்பட்ட அழகான காதல்!
இணையம் வளர்த்த இணையற்ற
இன்ப காதல்...
காண கண்கள் துடிக்கிறது!
கண்டதும் ஏமாற்றம்!
அழகற்ற முகங்கள்...
புஸ்ஸென்று ஆகிவிட்டது
புதுமை காதல்...!

Friday, January 7, 2011

நான் விரும்புவது உன் ஸ்பரிசமே!

உடல் சோர்வடைந்திடும்
தருணத்தில்...

உறவுகளின் ஏமாற்றத்
தருணத்தில்...

நட்பின் விரிசல்
தருணத்தில்...

தோல்விகளால் துவண்டிடும்
தருணத்தில்...

நான் விரும்புவது உன் ஸ்பரிஷமே!
அன்னையே!

துன்பமும் இன்பமே!

சிறையும் சுகம்தான்
உன் எண்ணச் சிறையில்
நான் அகப்பட்டால்...

நெருப்பும் பனிக்கட்டிதான்
உன் காதல் நெருப்பில்
நான் தீண்டப்பட்டால்...

சூறாவளியும் தென்றல்தான்
உன் காதல் சூறாவளியில்
நான் சிக்கிக்கொண்டால்...

கோடைக்காலமும் மழைகாலம்தான்
உன் காதல் மழையில்
நான் நனைந்திட்டால்...

பாலையும் சோலைதான்
உன் காதல் மலரில்
நான் பூத்திட்டால்...

விலகல்...

விலகி செல்கின்றன
விரும்பிய இதயங்கள்
அவளின் ஆடை
விலகாததால்..