Friday, December 3, 2010

வெள்ளை காகிதம்!

வெள்ளை காகிதமாயிருந்த
என் உள்ளத்தை
உன் காதலால்
காவியமாக்கிவிட்டாய்...

மௌனத்தின் மொழி!

அன்பே!
உன் மௌனத்தின்
மொழியாகிட
ஆசை!

Thursday, December 2, 2010

கருமேகங்கள்...

காதலன் மேல்
ஊடல் கொண்ட
கவலையால்
கறுத்து கண்ணீர்
மழை சிந்துகிறதோ!

காதல் பூத்திட்ட தருணம்!

பார்க்கும் முகமெல்லாம்
புதியதாய் பார்க்கும் பிரமிப்பு!

கேட்கும் குரல்களையெல்லாம்
எங்கோ! கேட்கும் பிரதிபலிப்பு!

அறிந்த இடத்திற்கு சென்றாலும்
அறியாமல் நுழைந்த முழிப்பு!

அறியாமலிருந்த 'நீ' மட்டும்
அறிந்தது போல் முத்தாய்ப்பு!

விக்கல்

நிற்காத விக்கல்
எனக்கு
நீர் அருந்து என்றாள்
அன்னை
அருந்தியும் நிற்கல!

உன்னை நினைப்பார்கள்
யாராவது
அவர்களை நினை
என்றாள்

உறவுகளை நினைத்தேன்
நிற்கல!
உன்னை நினைத்தேன்
நின்றது..

காட்சிப்பொருளா!

பெண்பார்க்கும் படலம்
பார்த்ததும் பிடித்து
விட்டதாம்...
பொருத்தம் பொருந்தாமல்
போய்விட்டதாம்...

வாழப்போகிறவளை
விட்டுவிட்டு
அன்னையின் எதிர்பார்ப்பு
தந்தையின் எதிர்பார்ப்பு
சகோதரனின் எதிர்பார்ப்பு
என்று வழிவிட்டு
இவளின் கனவுகள்
நசுங்கிவிட்டது!

உருப்படாத ஜாதிபார்ப்பில்
உட்பிரிவு ஜாதியாம்
உடன்பாடில்லை
உடைந்திடும்
இதயங்கள்...

ஒப்பற்ற அழகில்
ஒரு சிலையென
இருந்தாலும்
ஒரு குறை காண்பித்து
ஒடுக்கப்படும்
இதயங்கள்

விணான பதார்த்தத்தில்
நசுக்கப்படும்
இவளின் ஆசைகளும்
வீணாய்
குப்பை கூடையில்

பெற்றோர்கள் பெண்ணை
காண்பிக்க
மற்றோர்கள் பார்த்து செல்ல
உணர்ச்சியற்ற காட்சிப்பொருளா
பெண்...!

ஜன்னலோர இருக்கை

பேருந்து பயணம்
சுகமே!
ஜன்னலோர
இருக்கை பயணம்
சுகமோ! சுகம்!

எனக்கு,உனக்கு
என்று செல்ல
அடிதடி யுத்தம்
ஜன்னலோரத்திற்கு...

முன்னால் பின்னால்
முட்டி மோதி
மூச்சு முட்டினாலும்
'ஜில்' சுவாசம்
ஜன்னலோரதிலே!

நகர்திடும் மரங்களையும்
பறந்திடும் பறவைகளையும்
முகத்திலடிக்கும் காற்றையும்
முகர்ந்து ரசிப்பது
ஜன்னலோரதிலே!

மழை நாளில்
தெறிக்கும் சாரலை
இசைக்கும்
மெல்லிசையில் சுகிப்பது
ஜன்னலோரதிலே!

Thursday, November 25, 2010

மழை அளித்திடும் முத்தம்!

மழை அளித்திடும்
முத்தத்தால்...
மழைக்கும் வலி இல்லை
மண்ணிற்கும் வலி இல்லை
பிறப்பது இன்பமே!

மழை நீ!
மண் நான்!
முத்தம் அளித்திட்டால்
பிறப்பது காதலின்
இன்பமே!

Tuesday, November 9, 2010

இழப்பினை அறிவாரோ!

மலரினை இழந்த செடியின்
வேதனையை யார் அறிவாரோ!
காதலை இழந்த முகத்தின்
வேதனையை யார் அறிவாரோ!

மலர் பூத்திட்ட செடியின் மகிழ்ச்சியும்
காதல் பூத்திட்ட முகத்தின் பூரிப்பையும்
உலகம் அறியுமே!
அறிந்ததும் பறித்திட
ஆயிரம் கைகள் இங்கே!

சுமந்திட்டாலும் சுமையில்லா சுகமே!
சுமந்திட்ட அன்னைக்கு! இங்கும் சுகமே!
மலரை சுமந்திட்ட செடிக்கும்!
காதலை சுமந்திட்ட இதயத்திற்கும்!

எங்கள் வேதனையில் சுகம் கண்டிடும்
கழுகுகள் எங்களின் இதயத்தை பறித்து
சுகத்தை சும்மா அள்ளிவிடுகின்றனரே!
அது நிலைக்காத சுகம்
அவர்களுக்கு என்று அறிவாரோ!

Sunday, October 17, 2010

காதல் வந்த பிறகு...!

என் கண்கள் எப்பொழுதும்...
மௌனத்தில் போட்டிருக்கும்
அலைபேசியின் மீதே!

உன்னிடம் பேசும் போது...
உன் குரலினை கேட்டுக்கொண்டே!
நான் உன்னிடம் பேச
நினைத்ததை மறந்தேன்!

இணையத்தில் 'நீ' இருந்தால்...
துள்ளிக் குதிக்கும் மனம்!
ஹாய் என்று 'நீ'
ஆரம்பிக்கும் வரை
துடிதுடிக்கும் என் விரல்கள்...

'நீ' கொஞ்சும் வார்த்தையும்...!
'நீ' கோபப்படும் வார்த்தையும்...!
வேதமே! எனக்கு...!

'நீ' அழைத்திருப்பாயோ!
என்று! இரவினில்
கண்விழித்து அலைபேசியினை
தேடிடும் கைகள்...!

எங்கெங்கு காணினும்
நீயே எனக்கு!
உன் முகம்
தேடிடும் விழிகள்...!

காதல் வந்ததா..!
பைத்தியம் வந்ததா...!
குழம்பியே! நான்...!

ஆசை...! ஆசை...!

உயிரான காதலனே!
உன் தோளினில் சாய்ந்து
உன் மொழிகளை
ரசித்திட ஆசை...!

மழைத்தூரலில் நடக்கையில்
உன் ஒரு விரல் பிடித்து
ஒரு குடையில்
நடந்திட ஆசை...!

வயல்வெளியில் நடந்திடுகையில்
உன் கைகளை இறுகபிடித்து
வயல்வெளி தென்றலை
முகர்ந்திட ஆசை...!

சிறிய கோபத்தின் ஊடலில்
சமாதானமாய் பேசிடும்
உன் கொஞ்சும் வார்த்தைகளை
கேட்டிட ஆசை...!

உன் மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'நீயே' உலகமென்று
உறங்கிட ஆசை...!

Saturday, October 16, 2010

மருதாணி... நட்பு!

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

அழகாய்,அழகழகாய்...
திட்டம் தீட்டி
கைகளில் வரைந்து
அதிகமாய் சிவந்தால்

நல்ல கணவர் கிடைப்பாறாம்...
என்றே! கிண்டல்,கேலிச்
சிரிப்பு ஓய்ந்து
தூக்கம் கண்ணை சொருகினால்

மருதாணி களைந்து விடும்...
பயத்தில்.....
அரைகுறை தூக்கம்
தூங்கி..

விடிகாலையில்..
செக்கச் செவ்வென!
சிவந்த கைகளும்...!
சிவந்த கண்களும்...!

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!

எப்படி பிரிந்ததாகும்...!

உன் அன்பு மொழிகள் என்னிடம்!
உன் சிரிப்பு மொழிகள் என்னிடம்!
உன் குறும்பு மொழிகள் என்னிடம்!
உன் கோப மொழிகள் என்னிடம்!
உன் கொஞ்சும் மொழிகள் என்னிடம்!
உன் ஆறுதல் மொழிகள் என்னிடம்!
உன் அசடு மொழிகள் என்னிடம்!
எல்லாமே! என் நினைவுகளாக!
எப்படி உன்னை பிரிந்ததாகும்...
என் மனம் உன்னிடமே!

Wednesday, October 13, 2010

எங்கே! நீ! எங்கே!

என்னவனே!
என் உயிர் என்னிடமில்லை
என்றறிந்த தினம் முதலே!
எங்கிருக்கிறாய் என்றே! தேடுகிறேன்!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

என் கண்களில் நீ தென்படவில்லை..!
என் கனவில் உனக்கு உருகொடுக்கிறேன்!
விடிந்ததும் உன் உருவமும் மறக்கிறது!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

உன் குரலுக்கு இசையினை மீட்டி..
கேட்டு கேட்டு ரசிக்கிறேன்!
இன்பமாய் ஆழ்க்கையில் கற்பனை
இசைஎன்றே! அறிகிறேன்..!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

அன்பின் அமுத சுரபியே!
அறிவின் உச்சமே!
புன்னகையின் சொந்தமே!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

தேடி வரும... வரன்களில்
உன்னையே! தேடுகிறேன்...!
என் மனதை கொள்ளையடித்த
என் செல்லமே!
நீ மட்டும் இல்லை...

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைகிறேன்!

எனக்காக பிறந்தவனே!
எனக்காக வருவாய்...!
எனக்கே! எனக்கே!
வருவாய் அன்பே!

என் கனவு நீயே!
என்று வருவாய் என்றே!
காத்திருக்கிறேன்...!
விரைவில் என்னை
சேர்ந்திடுவாயே!
என் கண்ணின்மணியே!

எங்கே! நீ! எங்கே!
தேடித் தேடியே! களைக்கிறேன்!

இவை புதிய மாற்றங்கள்...!

ஒரு வரி விடாமல் படிக்கும் புத்தகத்தில்
ஒரு வரி கூட படிக்க முடியவில்லை
சிரிக்கிறது புத்தகம்...

அதிர,அதிர நடக்கும் என் கால்கள்
அன்னமோ! என்று பிறரை
கேலி பேச வைக்கிறது இன்று...

தோழிகளுடன் கைகோர்க்கும் கைகள்
தோழிகளை விட்டு தொலைவில்...நளினமாய்
துப்பட்டாவின் நுனியை சுற்றுகிறது...!

குறும்பு ,கேலிச் சிரிப்பு சிரிக்கும் முகம் இன்று
மனதின் நாணத்தால் பைத்தியமோ! என்று
பிறர் பார்க்க தானாய் புன்னகை பூக்கிறது!

ஏன் இந்த புதிய மாற்றங்கள் எனது உயிரே!
என்ன மாயமோ! மந்திரமோ!
என் மனதில் நீ நுழைந்த ரகசியமோ!

தந்திரக்காரா...!

தந்திரக்காரா...! தந்திரக்காரா...!
என் மனதை
உன் பின்னால் ....
சுற்ற விட்டு
ஒன்றும் அறியாமல்
இருக்கிறாயே!
நியாயமா...!

Monday, October 11, 2010

என்னை மாற்றினேன்..!

என்னவனே!
உனக்காக என்னை மாற்றினேன்!
உன் மனதுக்கேற்ற மரகதம்மாயிருக்க ..!

ஆனால்,
'நீ' இல்லாத இந்த வாழ்க்கை சொல்கிறது...!
அடி பைத்தியக்காரி...

'நீ' அவனுக்காக குனிந்து போனாய்...
காதல் உன் அறிவை மறைத்ததால்...
இன்னமும் 'நீ' நிமிரமுடியவில்லையே!
என்று...!

சூன்யமான வாழ்க்கை...

உன் மீதுள்ள காதல் தான்..
என் வாழ்க்கையின் இடைஞ்சல்
என்றெண்ணி...

காதல் எண்ணத்தை விட்டேன்...!
ஒரு நொடி தான்...

என் உணர்ச்சிகள் மடிந்து...!
வாழ்க்கை சூன்யமானது...!

Wednesday, October 6, 2010

நவீனமான தவறுகள்... ஏனோ? இளைய பட்டாளமே!

இளைய பட்டாளங்களே!
இளமையின் முருக்கில்...
குறும்பு செய்திடும் வயது தான்...
குறும்பில் தவறுகள் ஏனோ?
தவறுகளில் நவீனத்தை
கலந்து கலாச்சாரத்தை
காணாமல் செய்துவிடுவீர்களோ!

பெண் விடுதலை என்பதை
ஆடை விடுதலை என்றே!
தவறாக சிலர் எடுத்துவிட்டார்களே!
கையில்லாத சட்டையும்...
குட்டை பாவாடையும்...
கைகுட்டையில் ஆடையணிந்து
கண்ணியத்தை குறைத்து
பெண்மையை தாழ்த்துவது ஏனோ!

அலைபேசி பட்டி, தொட்டி
எங்கும் அலைகிறது...!
எவ்விடத்திலும் தொடர்பு
கொள்ள கண்டறிந்தது..!
எட்ட உறவை
கிட்ட நிற்க்கச் செய்யும்...

சில இளைய படைகளுக்கு
ஆபாச எஸ்.எம்.எஸ்...
ஆபாச வீடியோ...
என்றே! தவறுகளின்
சிறிய பெட்டகமாக ஆகிவிட்டதே!

பேருந்து நெரிசலில்
ஆடை சரிவதையும்...
குனிந்து கோலம்
போடும் பெண்களையும்...
சிறிது கவனக்குறைவால்
ஆடை விலகிடும் பெண்களையும்...

அலைபேசியில் படம்பிடித்து...
உடனுக்கு உடனே உலகம்
முழுதும் பரப்பிடும்
தொலை தொடர்பு சாதனம்
தொல்லைத்தொடர்பு சாதனமே!

எங்கேயோ? பெண்களின்
அலைபேசி எண்...
இணைய முகவரி பெற்று
ஹாய் சொல்லி ஆரம்பித்த நட்பில்
மெல்ல, மெல்ல ஆபாச
வார்த்தைகளை அனுப்பிவிடுவது...

காதலும் சொல்லி...
விளையாட்டு காதல் என்றே!
வீணாய் மனதை காயப்படுத்துவது...
நல்லவர்கள் போல் நடித்தே!
காணாமலே காதல் சொல்லி...
கண்டபின் காமக்
களியாட்டம் நடத்துவது...
ஏன் இளைஞர்களே!

வெட்டலும், ஓட்டலும்
சாதாரணமாகிவிட்டது...!
கண்ணியமிக்க பெண்ணின்
கௌரவத்தை சிதைக்க...
கணினியில் காமப்படத்தில்
முகத்தினை பதித்து
இணையத்தில்...
உலவ விடும் தவறில்

மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்
மானங்கெட்ட...!
சில இளைய
சமுதாயம் திருந்திடுமோ!

அன்று... இன்று அவன்...!

அன்று... அவன்...!

என் நெஞ்சத்தில் 'நீ' என்றான்!
அவளும் மயங்கினால்...
என் நெஞ்சத்திலும் 'நீ' என்றாள்!

இன்று... அவன்...

என் மஞ்சத்தில் வேறொருத்தி என்கிறான்!
என் இதயத்தில் என்றுமே 'நீ' என்கிறாள்!
மஞ்சத்தில் இருப்பவளே!
என் நெஞ்சத்தில் என்கிறான்...

இவளோ! திருந்திவிடு என்றே!
கண்ணீர் விடுகிறாள்...!
திருந்தவில்லை காமப்பிசாசு
இவள் நெஞ்சத்திலிருந்து

அவனை அகற்றவே!
இவளின் உறுதி...!
அன்பின் மிகுதியில் அகற்ற
முடியாமல் அவன் திருந்தவே
காத்திருக்கிறாள்..

பிறப்பிடம்...! முடிவிடம்...!

கவிதையின் பிறப்பிடம்...
காதலோ...!
காதலின் முடிவிடம்...
கல்யாணமோ...!

கவிதை வாழ்கிறது!
காதல் தோல்வியில்...!
காதல் முடிவுபெறுகிறது!
கல்யாணத்தில்....!

ஏனோ...!....?

என் இதயத்தை திருடி விட்டு
அவன் நினைவுகளை மட்டும்
விட்டு சென்று விட்டான்...!
அவன் நினைவுகளை....
சுமக்கும் சுகம் சுகம்தான்...

நிறைவேறாத அவனின்
நினைவுகளை....
கனவாய் சுமந்திடும் போது...
கண்கள் கண்ணீரை
பொழிவது ஏனோ...!...?

Saturday, October 2, 2010

என் மனமே! தூது....

அன்பே! உனக்கு
என் மனதை சொல்ல
காற்றை அனுப்ப எண்ணினேன்...!
காற்றில் நிறைய மாசு
கலந்து விட்டதாம்..
மாசற்ற காதல்
மாசாகி விட்டால்...
என்ன செய்வேன்!

ஆற்று நீரில்
என் அன்பினை
அனுப்ப எண்ணினேன்...!
ஆற்றில் சாயநீர்
கலக்கிறார்கலாம்...
களங்கமில்லாத காதலில்...
கறை பட்டுவிட்டால்...
என்ன செய்வேன்!

அழகு புறாவை
என் காதல் சொல்ல
அனுப்ப எண்ணினேன்
புறாவை வறுத்து
உண்ணும் கொடியவர்
பலர் உள்ளனராம்...
நல்ல காதல் நம் காதல்
நாசம் செய்துவிட்டால்
என்ன செய்வேன்!

என் மனதையே!
தூதாக அனுப்பிவிட்டேன்
கண்களை மூடி...
உணர்ந்து பார்
என் மனது
உனக்கு புரியும்...
உயிரானவனே!

ஆட்டோகிராப்....

அன்பே! காதலின் பெயரில்
என் இதயத்தில் 'நீ'
எழுதிய மொழிகளை
என் தோழிகள் அவற்றை
கீறல்கள் மற என்கிறார்கள்...

அவர்களுக்கு தெரியவில்லை
அவற்றை நான்... எப்படி
மறப்பேன் என்று...!
எனக்கு அவை
உன் ஆட்டோகிராப் அல்லவா...!

போற்றுவோர் போற்றட்டும்... தூற்றுவோர் தூற்றட்டும்...

நாம் மட்டுமே! நம் கையில்
நம்பிக்கையாய்... தன்னம்பிக்கையாய்...
இருந்திடு மனிதனே!

முகஸ்துதி பாடி
முதுகுக்கு பின்னால்...
குத்துவோரும் உள்ளனரே!

பொறாமை தீயில்
வெந்து பொய்
பல சொல்லி நோகடிப்பரே!

தொட்டதெற்கெல்லாம் குறை
சொல்லி கிண்டலாய்
சிரிப்பாய் சிரிப்பாரே!

நிறை மட்டும்
சொல்லி புன்னகை
பூவாய் பூப்பாரே!

எவராய் இருந்தால்
என்ன நியாயத்தை
மட்டும் ஏற்றுக்கொள்வீரே!

துதியில் மயங்காதீர்!
பொறாமையில் நோகாதீர்!
குறைசொல்லிகளால் துவண்டுவிடாதீர்!
நிறைகேட்டு ஆணவம் கொள்ளதீர்!

போற்றுவோர் போற்றட்டும்...
தூற்றுவோர் தூற்றட்டும்...
சமநிலையுடன் இருப்பீரே!

மறப்பாயா.... மன்னிப்பாயா...

அன்பே! நாம்
பிரிந்த நாளில்
உணர்ந்தேன் நான்
செய்த தவறுகளை....

தவறை உணர்ந்த என்னை!
உணர்ந்து கொண்டு
தவறுகளை மறப்பாயா...!
மன்னிப்பாயா...!

Monday, September 27, 2010

விட்டு விடு என்னை!

விட்டு விடு என்னை!
விட்டு விடு என்னை!
விலகி செல்கிறேன்!
உன்னை விட்டு!

என் இதய தோட்டத்தில்
விலகாமல் சிறகடித்து
என் மனதை கவர்ந்து
சிறைபிடிக்காதே! கள்வனே!

விலகி செல்கிறது உடல்
விலகாமல் என் மனம்!
விட்டு விடு....
என் மனதினை!

விடுதலையை விரும்பாமல்
விடுதலை கேட்கிறது...
என் மனம்...
விட்டு விடு என்மனதினை!

மலர்கள் சிரிக்கின்றதோ!!

மலர்கள் சிரிக்கின்றதோ!
அழகு முகத்தில்
பனித்துளி முத்துக்கள்...
அழகாய் மின்னுகின்றது!

ரோஜா!

வண்ண வண்ணமாய்
அடுக்கிய அழகிய
இதழ்களில் மென்மையாய்
வாவென்று அழைத்து
மெல்லமாய் தலையசைக்கிறாய்!

உன் அழகினை
கண்டதும் கவர்ந்திடவே!
துடிக்கிறது மனம்!
என் கூந்தலில்...
சூடி கொள்வதைக்(கொல்வதை) விட

உன் தாயின் மடியில்
துள்ளிக் குதிப்பதைக் கண்டு
பிரியமனம் இல்லாமல்
பிரிந்தேன்...!

விடியல்...

பறவைகளின் இன்ப இசை!
புது மணம் பரப்பும்..
காலைத் தென்றல்!
தலையாட்டிடும் மலர்கள்...

சிரித்திடும் பனித்துளி!
மெல்லமாய் எட்டி
பார்க்கும் கதிரவன்!

புத்துணர்வாய்...
புதியதோர் உலகத்திற்கு
அன்பாய் அழைத்து
செல்கிறது விடியல்...

Tuesday, September 21, 2010

காதல் காப்பாற்றப்படட்டும்...

என் உள்ளத்தில் காதல் என்பது
இருவரும் ஒவ்வொருவரின்...
மிகை குறை புரிந்தே!
புரிந்ததின் பால் ஈர்த்து,ரசித்தே!
விட்டுக்கொடுத்து வாழ்வதே!

கல்லூரி சென்றாலே!
காதலிக்க வேண்டும் என்றே!
கௌரவ பிரச்சனையாகி விட்டதே!
காதலை புரிந்து கொள்ளாமல்
கண்டதும் காதல்...
காசிருப்பவர்களிடம் காதல்..

காலம் சில கடந்தும்
கலகம் கண்டு...
காதலா! இல்லையா! என்றே!
தெரியாமலே!
இழுத்து பிடித்து நிறுத்தி...
இருவரில் ஒருவர்
மட்டுமே! தியாகம்...

காதல்! காதல்! என்றே!
கல்யாணமும் கண்டு...
கனிவு மறைந்து....
காதல் கசந்து...
கச்சேரி படியேறி!
காதலுக்கு(விவாகரத்து) பிரிவு!

காதல் திருமணமோ!
நிச்சயித்த திருமணமோ!
சேர்வது இருமனம் தானே..!..?
இருவகை மணத்திலும்...
இருமனங்களில் காதல் மலர்ந்து
மணம் வீசிட வேண்டுமே!

காசிற்க்கோ! கௌரவத்திற்க்கோ!
அழகிற்க்கோ! இன்னும் எதெற்க்கோ!
காதலில் விழுந்து...
பின் தோல்வியும் கண்டு...
அன்பெனும் பாலத்தால்...
இணையும் காதலை
அசிங்கப்படுத்தாதீர்!

காதல் தொடங்கிய பின்
ஒரு மனதில் வாழும் காதலை!
ஒருதலை காதலை!
புரிய வைத்திடுங்கள்...

இருவரில் ஒருவரின்
உள்ளத்தில் காதலிருந்தால்
உள்ளத்தில் வாழட்டும்...
உங்களை பிடிக்காதவரை
பிடிவாதத்திற்க்காக பிடித்து
வைக்காதீர்....

இருவரின் உள்ளங்களிலும்
காதலில்லை என்றறிந்த
பின்பே! பிரச்சனைகளுடன்
பிடிமானம் வேண்டாம்...!

முடிந்தால் காதலை
புரிந்து கொள்ளுங்கள்...
இல்லை என்றால்
பிரிந்து கொள்ளுங்கள்...
காதலின் புனிதம்
காப்பாற்றப்படட்டும்...!

காத்திருப்பேன்...!

கண்ணே! மணியே! கனியமுதே!
என் காதலியே! என்னவளே! என்றே!
கொஞ்சிய நீ...! மறப்பாயே!
என்னை... என்று
மதிகலங்கி சொல்கிறாயோ!

துரத்தி! துரத்தி! காதலித்த நீ...
உன்மேல் காதலில்லை...!
நல்ல நண்பர்களாகவே!
பிரிந்திடுவோமே! என்றே!
மதி கலங்கச் செய்கிறாயே!

என் காதலை புரிந்து
பித்து பிடித்த உன்மனம்
மாறி திரும்பும் வரை...
கலங்காமல் காத்திருப்பேன்!
என் கண்ணனே...!

Wednesday, September 15, 2010

உன்னைப்பற்றிய என் கவிதைகள்...

உன்னைப்பற்றிய என் கவிதைகள்...
காகிதமும்...,பேனாவும்... கொண்டு
கிறுக்கியது அல்ல....!

என் உயிர் கொண்டு
உன் நினைவுகளை...
ஓவியமாய் வரைந்த
காவியங்கள்....

காகித ஓவியம் சிதைந்துவிடும்!
என் மனவோவியமாய்... வரைந்த
உன் நினைவுகள் என்னும்
காவியம் சிதையாது அன்பே!

அன்பினை அளித்திடுவோம்....!

அன்பு செலுத்த செலவில்லை
அதில் ஏன் கஞ்சத்தனம்...
அனைவரும் மனிதர்கள்...
தன் சுற்றம்,தன் நட்பு
தாண்டாத அன்பு ஏன்......?

எதிரிகளிடம் அன்பு செலுத்தினால்
எவனும் நட்பாவான்...
எதிர்பார்ப்புகளுடன் மட்டும்...
அன்பினை செலுத்துவது ஏனோ...!...?

கொலை செய்தவனிடம்...
கொஞ்சமாய் அன்பு செலுத்தினால்...
மனம் திருந்தியே!
மகிழ்வாய் வாழ்வான்...

தீயோர் என்று ஒதுக்குவதைவிட
திகட்டிடும் அன்பினை அளித்தால்...
திருந்தியே! வாழ்ந்திடுவாரே!

அன்பினை செலுத்திடுவோம்!
அனைவரும் அன்பிலே!
இன்பமாய் இணைந்திடுவோம்!

Friday, September 10, 2010

நிலவு!

வெள்ளையாய் வந்த
அழகு ராஜகுமாரியோ...!
காண காலையிலிருந்து
மாலைவரை தவம்!

சிலநாட்கள் பாதி முகம்
மட்டும் ஏனோ...!...?
மாதம் ஒரு நாள்
தரிசனம் தர
மறுப்பது ஏனோ..!...?

விண்மீன் தோழிகள்
உனக்கு துணையோ!
தோழிகளுடன் முகிலில்
மறைந்து கண்கட்டி
விளையாடுவதும் அழகே!

உன் தோழிகளுக்கு...
என் நேரமும் உன் நினைவோ..!...?
மின்னி! மின்னியே! அழகாய்
உன் புகழ் பாடுகின்றனரே!

உன் காதல் இல்லை...

உன் காதலில்லை என்று
என் அறிவிற்கு எட்டியது
என் உணர்வுகளுக்கு எட்டவில்லை
கண்ணீர் துளிகளாய் என்
காதலை சிந்துகிறது.....

நினைவுகள் போதும்!

உன்னை மறந்து வாழும்
வேதனையை விட!
உன் நினைவுகளை சுமந்து
வாழும் சுகம்
ஒன்றே! போதும்...

Thursday, September 9, 2010

முன்னேற்றம்...

புறஞ்சொல்லிகள் பொறாமை 'தீ'
கொண்டு வருத்த 'தீ'
மூட்டி வாழ்கையில் வேதனை
அனல் அடிக்கவைககிறார்கள்....

பணைமரத்தடியில் நின்று பால்குடித்தால்
கள்குடித்தான் என்று பரப்பியது மாறி
பணைமரத்தடியில் பணங்காயுண்டாலும்...
கள்குடித்து விழுந்து கிடந்தான் என்றே!
மனங்கூசாமல் பறையடிக்க
முன்னேற்றம் கண்டுவிட்டார்கள்...

Wednesday, September 8, 2010

இசை!

இனிய கவிதை வரிகளில்
இன்பமான மெல்லிசை மீட்டி
இன்பத்தின் உச்ச பரவசத்தில்
பறக்க வைத்திடும்...
இன்ப இசை ஒன்றே!
போதும் மனம்
இன்பத்தில் இலய்த்திட...

Tuesday, September 7, 2010

புண்படுத்திய ராசி...

பெண் பிறந்த ராசியால்
குடிசையிலிருந்த நான்
இன்று கோபுரத்தில் என்று
சொல்லும் தந்தை...

லக்ஷ்மிகரமான பெண் கையில்
தொடங்கினால் தொடங்கும்
தொழில் வெற்றி என்று ஊரில்...

உங்கள் பெண் ஜாதகத்தில்
எங்கள் இல்ல மருமகளானால்
கூரை உடைந்து கொட்டிடும்
செல்வம்... என்றே வரன் வீட்டினர்

பல காரணங்களால் முடிவாகவில்லை
வரன் உங்கள் பெண்ணை
பார்த்தவுடன் பலநாட்களாய் தள்ளி
போன திருமணம் அரங்கேறிவிட்டது...
ராசியான பெண்...

என்று கேள்விப்பட்ட போதெல்லாம்
என் மனம் சிறிதளவு பூரித்தது...
அதே! ராசியால் இன்று மனம்
புண்படுகிறது....

நீ என் வாழ்கையில் வந்ததால்
விட்டு சென்ற என் முன்னாள்
காதலி திரும்பிவிட்டாள்...

நீ வந்த ராசி என்று 'நீ' சொன்னாய்
முதன்முதலில் என் மனதை
புண்படுத்தியது என் ராசி...

என் காதலை சொல்லும்...

உன் பெயரினை எழுதி
உன்னை அதில் காண்கிறேன்
அதில் நான் அளித்திடும்
முத்தத்தின் ஈரங்கள்
சொல்லும் என் காதலை....

Monday, September 6, 2010

எங்கே காதல்...

காதல்... காதல்... காதல்...
எங்கே காதல்...

உள்ளத்தின் உணர்வுகளில்
உண்மையான காதலுக்கு
ஜாதி ஏற்படுத்திடும் தடை
மாறிவிட்டது...

ஐஸ்கிரீம் ஒன்றில்
இருவர் உண்கிறார்கள்
உருக, உருக
உருகிவிடுகிறது காதல்...

அலைபேசியில் அசைபோட்டிடும்
காதல் அலையாய்
அலைவரிசையிலே
கரைந்துவிடுகிறது காதல்...

பர்ஸ் இருந்தால் பாசமாய்
பேசிடும் சில பாவையர்கள்
பர்ஸ் காலி என்றவுடன்
பறந்துவிடுகிறது காதல்...

பிகரென்று பின்னால்
அலைந்திடும் காதலன்
பிசிறில்லாத அழகுடன்
இன்னொருத்தி கிடைத்தால்
பிய்த்துக்
கொள்கிறது காதல்...

தகதகவென தங்கத்தை
தாங்குபவளிடம் தடுமாறுகிறான்
தங்கம் தனக்கில்லை
தாலி போதும்
கட்டிய புடவையுடன் வந்தால்
தாவி விடுகிறது காதல்...

பளபளப்பாய் இருப்பவளிடம்
பாசத்தை காட்டி
காமக்களியாட்டம் நடத்தி
பாவையின் உயிரை
பறித்துவிடுகிறது காதல்...

விளையாட்டாய் பொழுதுபோக்காய்
காதல் சொல்லி விளையாட்டிற்கு
சொன்ன காதல் என்று
மனதிற்கு விஷம் கொடுத்து
கொன்று விட்டு
விலகிவிடுகிறது காதல்...

இதுதான் இன்றைய காதலோ!
நான் பேச நினைத்ததை
நீ பேசியது அப்பொழுது!
எங்கே காதல் என்று
தேடிடும் காதல் இப்பொழுது!

Friday, September 3, 2010

வதந்தி பரப்பிகள்...

அழகிய ஓவியத்தின்
மதிப்பை காண சகியாமல்
மனம்புழுங்கி மதிகெட்டு
அசிங்கமாய் சித்திரத்தை
சிதைக்க வண்ணங்களை
அள்ளி தெளிப்பர்...

Sunday, August 29, 2010

பேனாவின் நாணம்!

அன்பே!
உன்னைப்பற்றி
கவிவரைய தொடங்கினால்
என் பேனாவும் ஒரு கணம்
நாணம் கொள்கிறது!

செவ்வானம்!

நான் உன்னை
எனக்காய் காக்கவைத்திட்ட
கோபத்தால் சிவந்ததோ!

பனித்துளி!

கதிரவனைக் கண்ட
நாணமோ!
அவன் இவளைக்
கண்டவுடன்
அழகாய் அழகு முகத்தினை
மறைக்கிறாள்...

மண் வாசம்!

மழையாகிய மதியான
காதலனை கண்டால்
மட்டுமே! வாசமாய்
தரிசனம் தருகிறாள்...

செல்லக் கோபம்...

அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...

Friday, August 27, 2010

அதிசய ஓவியம்!

என் மனதில் வரைந்த
அதிசய ஓவியமோ! நீ!
பேசும் ஓவியமாய்
என்னுடன் பேசுகிறாய்!

நீ அழிக்கவே! ஆணை இட்டாய்
உன் ஆணை நிறைவேற்ற!
கண்ணீரால் அழிக்கிறேன்!
அழிக்க முடியவில்லை!

Thursday, August 26, 2010

துயரம்!.... வாழ்வின்.... உயரம்!

எங்கில்லை துயரம்!
எல்லோர் வாழ்விலும்
ஏதோவோர் துயரம்!
அன்னையின் அன்பில்லை!
தந்தையின் ஆதரவில்லை!
வாழ்க்கை வசதியில்லை!
படிக்க வாய்ப்பில்லை!
காதலி கடைக்கண்காட்டவில்லை!
காதலனை காணவில்லை!
கணவன் கணிவாயில்லை!
மனைவி சமையலில் உப்பில்லை!
பிள்ளைகள் முதலிடம் வரவில்லை!
நல்லவரன் அமையவில்லை!
அப்ப....ப்பா.. நாள்தோறும்
ஒவ்வொரிடமும் கேட்கும்
துயர வார்த்தைகள் இவை!
துயரமின்றி வாழ்வில்
உயரமேது! என்றறிந்து...
இறுக்கமான மனம்தளர்த்தி!
இன்பமாய் வாழ்ந்திடலாமே!

Wednesday, August 25, 2010

தடுமாற்றம்!

காத்திருந்த போது
உன்னுடன் பேசிப்பார்த்த
வார்த்தைகளெல்லாம்
உன்னை கண்டவுடன்...
தடுமாறுகிறதே!
உன்னை பார்த்த
பரவசத்தில்...

வாழா வெட்டி...

கன்னியாய் இருந்தபொழுது
கண்ட கனவுகள் பகல் கனவாய்
இவளுக்கானதே!

கட்டியவன் கல்யாணத்திற்காக
வேஷம் போட்ட
கபடதாரி...

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

கொடுமையின் கொடூரனுடன்
வாழாமல் உயிரை விட துணிவு
இவளுக்கு!
பெற்றபிள்ளைகளுக்காக
பெற்றவர்களை நாடி இவள்...!

இவள் சிறிது சிரித்தாள்
சித்தரிக்கும் கதைகள்
ஊருக்குள்ளே!

சம்பளமில்லா வேலைக்காரியாக
இருந்தும்...
சகோதரனின் மனைவியின்
முனகல் இல்லத்திற்குள்ளே!

பிள்ளைகளை கரைசேர்த்திட!
பிள்ளைகளின் வருங்கால
கனவுகளுடன்....

துன்பகடலில் நாளும்
நீந்தியே! நித்தமும்
நிம்மதியின்றி.. வாழ்வே!

வாடகைத்தாய்...

சுமப்பதில் இவளுக்கு சுகமே!
தாய்மை வரமருளும்
தாயுமானவள் இவளே!

மழலை வரமருளும்
மங்கையர்க்கரசி இவளே!
இல்லச்சுமையை சுமக்க
சுமை இவளுக்கு!

பத்தியமும்,விரதமும்
பத்துமாத பந்தத்திற்கு
பரிவுடனே! ஏற்க்கிறாள்...

தன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்
என்றறிந்தே!
அழகான பூவினை
அன்பாய் சுமக்கும்
கற்பகவிருச்சம் இவள்...!

சுமையின் சுகமும்
உதையின் இன்பமும்
உருவாக்கிய பரவசமும்
மழலை இவ்வுலகை
கண்டவுடன்...
இவளின் மனதில்
உதைத்து...
பறிக்கப்படுகிறதே!

குழந்தை...














கை
,கால்கள் அசைக்கும்
துள்ளலில்..
அசையாமலே அசந்து
போகிறேன் நான்...

சிறுஅசைவும் உன்
விழிகளின் கவனத்தில்...
உருளும் விழிகளிலும்...
படபடக்கும் இமைகளிலும்...
என் மனமும் உருளுகிறது...

எதற்கு சிரிப்பென்று
புரியவில்லை உன்
இயல்பான சிரிப்பினில்
சிக்குகிறது மனம்...

உலகமே! உன் மூடிய
கைகளில் அடக்கம்...
என் விரல் உன் கைகளில்
அகப்படுகையில்

மெல்லிய இறுக்கம்
நிறைந்த மென்மையில்..
என் உலகமே! உன்
பிஞ்சுபாதங்களில் சரண்...!

Saturday, August 21, 2010

விளையாட்டு பொம்மையா...?

விளையாட்டாய் விளையாடி
செல்ல என் மனம்
விளையாட்டு பொம்மையோ...!

'நீ' காதல் என்றாய்
மறுத்தேன் நான்...
மறுத்த என்னில்
நீ நுழைந்ததும்...

விளையாட்டிற்காக காதல்
சொன்னேன் என்கிறாய்....!
உனக்கு காதல் விளையாட்டா!
இல்லை என் மனம்
விளையாட்டு பொம்மையா...!

Thursday, August 19, 2010

என் தோழி...!

கலகலப்பாய் சிரிப்பு...
ஆட்டம்,பாட்டம்...!
காட்டன் புடவை ஆசிரியையை
கண்டவுடன் காணாமல்
போகும் நம் குறும்பும்...!

நம்மை சமாளியாமல்
பிரித்து அமரவைத்த
ஆசிரியையை இடைவேளையில்
நமக்குள்ளே! பலநாள்
பிரிவு போல் திட்டியே!
சோக ராகம் பாடுவோம்...!

பொக்கைவாய் பாட்டியை
பலித்துக் காண்பிப்போம்...!
துரத்தும் பாட்டியிடம்
தப்பிக்கவே! ஓடி..
பாட்டியை
ஒலிம்பிக் ஓட்டம் ஓட
வைப்போம்....!

பள்ளிவிட்டு வருகையில்
பிடித்த அடைமழையில்
இதுதான் வாய்ப்பென்றே!
நனைத்தே! நடந்தே!
சாலையில் காகித
கப்பல்கள் விடுவோம்...!
கப்பல் கரைகையில்
கவலையில் ஆழ்வோம்...!

இடையில் சிறு பிரிவு...
இப்பொழுது காண்கையில்...
அதே உற்சாகம்...!
மறைந்துவிட்ட நம்
குழந்தைப்பருவ குறும்புகள்...
மறையாமல் நம் நட்பு...!

ஆக்கிரமிப்பு!

மனசுக்குள் மத்தாப்பு!
இதழ்களில் சிரிப்பு!
உன் நினைவே!தித்திப்பு!
என் எண்ணமெங்கும்
உன் நினைவே!ஆக்கிரமிப்பு!

விடாது...!

விடாது காற்று!
விடாது மழை!
என்னுள்...!

விடாது அன்பு!
விடாது உன்
நினைவுகளும்...
என்னை...!

Tuesday, August 17, 2010

குரு கொடுக்கும் தட்சணை...

பாசமும், பரிவும் பெண்மையின் அழகே!
புகுந்த வீட்டில் பாசம் காட்டிடு பாசமகளே!
அடக்கமும், அமைதியும் பூவையினருக்குரியதே!
அடக்கமும், அமைதியும் காத்திடு அருமைமகளே!

மாமியாரும்,மாமனாரும் எங்களைப்போலவுனக்கே!
மரியாதையுடன் நடந்துகொள் மதிமகளே!
களைத்து வரும் கணவனுக்கு பக்குமாய்ச்சமைத்தே!
கனிவாய் அளித்திடு கனிமகளே!

மணாளனின் மனம் அறிந்து நடந்திடு
என் செல்வமகளே!
படித்த படிப்பில் சம்பாதித்து கணவனின் கஷ்டங்களை
களைந்திடு கருணைமகளே!

என்றே! வாழ்க்கையின் கல்வியை போதித்து
வரதட்சணை என்றே!
தட்சணையும்... அளித்திடும் குரு!
பெண்களை பெற்ற... பெருமைமிக்க பாக்கியசாலிகளே!

Monday, August 16, 2010

இடைவெளியில்லா...இணையில்லா நட்பு..!

எங்கோ பிறந்திட்டோம்!
எங்கோ வளர்ந்திட்டோம்!
கல்லூரியில் கண்டோம்!
தோழர்,தோழிகளானோம்!

ஆண்,பெண் பேதமில்லை
நமக்குள்ளே...!
அனைவரும் கலந்தே!
கதையடித்தோம்!

தேர்வுக்கு முந்தியநாள்
மட்டும்!
புதியதாய் புத்தகங்களை
காண்போம்!

'குரூப்ஸ்டடி' என்றே!
விளையாட்டாய்... கலகலப்பாய்...
புதிரான புத்தகத்தை
படித்து தெளிவோம்!

தேர்வறையிலே! மேற்ப்பார்வையாளரின்...
கழுகுப்பார்வையில் தப்பித்தே!
தவறான பதிலென்றே! தெரியாமல்...
வரிசையாக காப்பியடிப்போம்!

அரியர் விழுந்தால்
சில மணித்துளிகள் சோகம்...
பின் அரியரில்லா மனுஷன்
அரை மனுஷன் என்றே!
ஆறுதல்!

எல்லோரும் எங்கெங்கோ!
எப்பொழுதாவது போன்,மெயில்
என்றே! தொடர்கிறது!
இடைவெளியில்லா...
இணையில்லா நம் நட்பும்!

Saturday, August 14, 2010

அன்பினை மறுப்பது ஏனோ...!....?

அருமை,அருமையாய்
ஆகாரங்கள் அள்ளி
சுவைத்தால் கசக்கிறது!
பக்குவமாய் அனைத்தும்
கலந்திட்டாய்...
அன்பினை கலந்திட
மறந்திட்டாய்... அன்னையே!

அழகாய்,அழகழகாய்
ஆடைகளும்...,ஆபரணங்களும்...
அணிந்தாலும் அழகில்லை!
கண்குளிர ரசிக்க 'நீ'
மறுத்திட்டதால்....
புன்'நகையை' அணிய
மறுத்திட்டேன்... அன்னையே!

பயப்பட ஒன்றும் இல்லை
சிறியதாய் காய்ச்சல்
என்றார்!
பிரபல மருத்துவர்...
குணம் காணவில்லை...
உன் மடிசாய நீ
மறுத்திட்டதால்... அன்னையே!

Thursday, August 12, 2010

முக ஸ்துதி....

கண்ணை மூடி
கடவுளிடம் லயித்த என்னை!
ஸ்ஸ்ஸ்.....ப்பா என்ற சத்தமே!
கவனத்தை சிதறடித்தது!

தன்னை தூக்கியே!
நடந்ததால் அந்த
'பெரிய'யம்மாவின் களைப்பின்
வெளிப்பாடு ஸ்ஸ்ஸ்.....ப்பா........

தங்கம் விலை குறைந்துவிட்டதோ....!
என்றே! மெல்லிய ஆச்சரியம்...!
அங்கமெல்லாம் தங்கமே!
நிறைந்திருக்கிறது...! அந்தம்மாளிடம்...

அர்ச்சனையின் பாதியிலே!
பாதிவாய் பிளந்த
பவ்ய புன்னைகையில்
அர்ச்சகர்...!

ஸ்பெஷல் பிரசாதத்துடன்....
அந்தம்மாவின் முன்னால்...
அவர் புன்னைகை போலவே!
அர்ச்சனை தட்டில் காசு...!

பிரகாரத்தை வலம் வருகையில்
இருபெண்கள் கையை பிடித்தே
புன்னகையுடன்...
அந்தம்மாவை வலம் வருகிறார்கள்...
பணமழை பொழிகிறது....!

வெளிப்பிரகாரத்தில் பலர்
கையைகூப்பி வணங்கியே!
வெள்ளந்திப்புனகையுடன்.....
கப்பலோ! இல்லை காரில்...
வழியனுப்புகிறார்கள்....!
விடாது பொழிகிறது பணமழை!

ஆச்சர்யம் தாளாமல்
யாரந்தம்மா என்றேன்...
தாங்கிய பெண்களிடம்!
அந்த நிறுவனத்தின் நிறுவனர்
மனைவி! என்றே!

ஊரடித்து உலையில்
போட்ட காசு அந்த உடம்பு
என்றே! அந்தம்மாவை
போல் நடந்தே!(நடித்தே)...
கேலிச்சிரிப்பு....

ஊரடித்து உலையில் போட்ட
காசாம்.....
ஸ்பெஷல் பிரசாதமும்...
பணிவான கைகூப்பலும்...
வெள்ளந்தி புன்னகையும்...
தொடர்ந்த பணமழையில்
நனைந்ததும்... எதற்காக...!
ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!!

Wednesday, August 11, 2010

உன் நினைவில்... என் ஜீவன்!

மனதிலிருந்து உனை
அகற்றவே! முற்படுகிறேன்...!
உனை மறக்க நினைத்த
நொடியில் நானே!
என்னிலில்லை என்றே!
உணர்கிறேன்!
உனை மறக்க நினைகையில்
என் ஜீவன் பிரிய நினைக்கிறது!
உன் நினைவில்... மட்டுமே!
என் ஜீவன்!

Tuesday, August 10, 2010

மழை!

கருமேகம் சூழும் இருளில்
என்னுள் மெல்லிய பிரகாசம்!
குளிர் தென்றல் மோதுகையில்
என்னுள் மெல்லிய அசைவு!

மழையே! வருவாயா! வரமாட்டாயா!
என்னுள் மெல்லிய பரிதவிப்பு!
மெல்ல!மெல்ல! தூரலிடுகையில்!

என் பரிதவிப்பு! மெல்ல!மெல்ல!
என்னுள் மெல்லிய புன்னகை
பூவாய் பூக்கிறது!

நீ மீட்டும் தூரல் இசையில்
இசைகிறேன் நானும்!
முகம் கொண்டு காணுகையில்
கண்களில் மெல்லிய படபடப்பு!

உன் பரவச நடனத்தில்
நானும் பரவசமாய்!
உன்னில் மெல்ல!மெல்ல!
கரையவே! துடிக்கிறது மனசு...!

Tuesday, August 3, 2010

தொலைதூரக் காதல்!

ஊரே! திருவிழா கொண்டாட்டத்தில்
ஒரு பார்வை மட்டும் என் மீது
முறைப்பாய் என் மறுபார்வை...
அசராமல் உன் பார்வை...!

தோழியுடன் திட்டினேன்...
பூவாய் சிதறியது உன் புன்னகை..!
பைத்தியமா! என்றேன்...
ஆம்! உன்! பைத்தியம் என்றாய்...

கோபமாய் திட்டித்தான் வீடு திரும்பினேன்
ஜன்னல் வழியே! கசங்கிய காகிதம்...
கடிதமாய் காதல் கவி வரைந்தாய்...
என்னுள் கனிந்தது காதல்...

தொலைவில் வேலைக்கு செல்வதாய்...
பிரிய மனமில்லை என்றாய்...
பிரியா விடையுடன் என் காதலை
அள்ளிக்கொண்டு சென்றாய்...

அலைபேசியே! கதி என்று கிடக்கின்றேன்...
நீ பேசும் இரு வரிக்காக...
உன் கடிதங்களை மறைத்து படிக்கும் பாடு
உன் காதல் கவிதை வரிகளில் கரைந்து போகிறது...

ஒற்றை மலரில்...
உன் முகம் காண்கிறேன்...!
குளிர் தென்றலில்...
உன் குரல் கேட்கிறேன்...!

பசுமை தரையில்...
உன் அருகாமையை உணர்கிறேன்...!
உன்னிடம் பேசுவது போல்...
நிலவிடம் பேசுகிறேன்...!

உன் கடிதங்கள்...
என் தலையணையில்...
விழிகள் நீ வரும் வழியில்
என்று வருவாய் என்ற பரிதவிப்போடு...!

இணையத்தில் சில விஷமிகள்...

கல்வியில் எழும் கேள்வியை...
கண்டறியவே!
இணையத்தில் இணைகிறாள்...

கேள்விக்கு பதில் கொடுத்தே!
ஒருவன் நண்பனாகிறான்...
கல்வியில் தொடங்கி நட்பாய்
தொடர்கிறது...

காணாமலே! காதல் விதை
விதைக்கிறான்!
காணவே! ஆசை என்கிறான்...
கண்டவுடன்! காதல் வேஷம் போட்ட

காமப்பிசாசு கன்னியவளை
களங்கப்படுத்துகிறது...
கல்வியில் வரும் இன்னலை
கண்டறிய வந்தவள்...

இணையத்தில் வந்த விஷமியால்
இணையத்திலே! இன்ப வாழ்கையை
தொலைதிட்டாள்...!

பிரிகிறேன்...

பிரியமாய் நான் உன்னிடம்...
பிரிந்து செல் என்று
சொல்லாமல் சொல்கிறாய்...

பிரிய எத்தனிக்கிறேன்!
உன்னை வெறுத்தல்ல!

என் பிரிவில்
உன் சந்தோசம் என்பதால்...

உன் பிரிவு எனக்கு
என்றுமே! வெளியிலே!
என் அகத்தில் என்றுமே! நீ!

பிரியா மனதுடன்...
நீ பிரியப்படுகிறாய்
என்றே! பிரிகிறேன்...

குடியில் கெடும் குடிகள்...

காலையில் பெண்டு,பிள்ளைகளிடம்
மாலையில் மளிகையும்,புத்தகமும்
வாங்கி வருகிறேன் என்றே! புறப்பட்டான்!

மூக்கை அடைக்கும் சாக்கடையில்...
முகம் சுளிக்கமால் முழுகுகிறான்...!

அழுக்கு துணிகளையும்
அலுப்பே இல்லாமல் அலசுகிறான்...!

அநாசயமாக முதுகில்
மூட்டையை முட்டி ஓடுகிறான்...!

தகிக்கும் தீயை சகித்து
வெந்தே இரும்பில் இரும்பாகிறான்...!

பரபரபாய் ஓடியே!
முதலாளியின் கட்டளையை முடிக்கிறான்...!

மாலையில் கை நிறைய காசு!
மளிகையும்,புத்தகமும் வாங்க செல்கையில்
வழியில் டாஸ்மாக்கில் கரைகிறது காசு!

தள்ளாட்டத்தில் வந்தவனிடம்
அடி, உதை தான் மிச்சம்
பெண்டு,பிள்ளைகளுக்கு...

மனைவியின் சொற்ப வருமானத்தில்
அரை வயிறு கஞ்சி நிறைகிறது...!

மறுநாள் காலையில் வழக்கம் போல்
பெண்டு,பிள்ளைகளிடம் கூறி செல்கிறான்....

தியானம்...!

என்னுள் இருக்கும் இன்பத்தை
வெளியில் தேடி களைத்தேன்...!
என்னுள் இருக்கும் இன்பத்தை
எனக்களித்த ஒரு வரம்...
தியானம்!

அலறும் அலைபேசிகள்....

அலைபேசி அலறுகிறது!
இன்னும் எத்தனை போலி
காதலர்களின் உரையாடலை
கேட்க்கப்போகிறோமோ! என்று....

போலி வாழ்க்கை...

சோர்ந்து சோபாவில்
பல மனிதர்கள்....
வேலை களைப்பல்ல!

தன் வீட்டை விட
அவன் வீடு பெரியது!

தனக்கு கிடைக்கும் முன்னே!
அவனுக்கு ப்ரோமோஷன்!

தன் மகனை விட
அவன் மகனுக்கு சம்பளம் அதிகம்!

தன் மகளை விட
அவன் மகளுக்கு பெரிய
இடத்து மாப்பிள்ளை...!

எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை
என்று...!

அவனை விட முன்னேற!
தன்னுள் இன்பம் தொலைத்து....

பணத்திலும், போலி கௌரவத்திலும்
இன்பம் தேடிகொண்டிருகிறார்கள்...

வேஷம்!

அன்பே! பகலில் உன் பிரிவின்
வேதனையை மறைத்து சந்தோஷ
வேஷம் போடுவது...
இரவில் தலையணையின்
மடியில் களைகிறது!
உன் நினைவுகள் என்
கண்ணீர் மழையாய்...

பிரிவின் வலி...

உயிர் பிரியும் வலியை விட
கொடுமையானது!
காரணமின்றி உயிராய் நினைக்கும்
உறவு பிரியும் போது....

பிரியும் நட்பு...

ஆண்,பெண் நட்பினை
காதலென்று கிசு,கிசுப்பவர்களின்
இன்பம் ஐந்து நிமிடம்...
கலங்கப்படுவதோ!
தூய்மையான நட்பு!

வதந்திகளை பரப்புவதில்
என்ன இன்பமோ!
பிரிந்து செல்கிறது பல
தூய்மையான நட்பு!

ஹய் ஹீல்ஸ்...!

அவள் கால்களில் உள்ள
'ஹய்ஹீல்ஸ்' செருப்பும் இன்று
பெருமை கொண்டது! பேருந்தில்
இடிக்கும் இடிமன்னனை இன்று
மிதித்து விரட்டிவிட்டோம் என்று..

சிவந்த ரோஜா...

அவளிடம் ரோஜாவை நீட்டி
'ஐ லவ் யூ' சொன்ன போது...
அவன் கையிலுள்ள ரோஜா
'கோபத்தில் சிவந்தது' நேற்று
வேறு பெண்ணிடம் அவன்
தன்னை நீட்டி சொன்னது
இன்னும் எத்தனை பெண்களிடம்
சொல்வானோ! என்று...

அன்னை!

அன்னையே! என் ஆலயம்!
அன்னையே! என் உயிர்!
என்று பேசும் தன் மகனின்
"மேடை பேச்சை" பெருமிதத்தோடு
ரசித்தால் அன்னை!
முதியோர் இல்லத்திலிருந்து...

பல்லியின் குதூகலம்...

பல்லி அவன் மேல்
விழுந்ததால் தோஷம் என்று
குளிக்க சென்றான்...
குதூகலித்தது... பல்லி!
இன்றாவது குளிக்கிறானே! என்று..

அழியாத மரம்...

அழிக்க முடியாத
அழியாத ஒரு மரம்...
அன்பே! என் மனதில்
நீ ஊன்றிய
காதல் விதையால்....
தழைத்தது!

காதல்....கல்யாணம்!

கடலலை தொடும் மணலில்
காதல் ஓவியம் வரைந்தார்கள்...
காதலோவியம் கல்யாண வண்ணம் தீட்டியது!
காணவில்லை இன்று காதலோவியம்...
களவாடியது யாரோ!
கடலலை கரைத்து விட்டதோ!

மரம்,செடி,கொடிகளின் கேள்வி....

துன்பமின்றி வாழ தூய்மையான
காற்றை கொடுக்கிறோம்...
தாகமின்றி வாழ குளிர்ச்சியாய்
மழை கொடுக்கிறோம்...

பசியின்றி வாழ பலவகைகளில்
உணவினை கொடுக்கிறோம்...
வெப்ப கொடுமையின்றி பயணம்செய்ய
நிழலினை கொடுக்கிறோம்...

எண்ணங்களை எழுத்தாக்க
காகிதங்களை கொடுக்கிறோம்...
வியாதிகள் பல குணமாகிட
மூலிகைகள் பல கொடுக்கிறோம்...

மனிதனே!
உன் வாழ்வின் ஆதாரம் நாங்கள்...
ஏன்?
எங்கள் வாழிடங்களை பறித்து...
வானுயர் கட்டிடங்களாய் மாற்றுகிறாய்...!

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

களங்கமில்லாத எங்கள் நட்பை
காதலென்று நீ பறையடித்தாய்...
கடினமாய் உன்னை கண்டித்தேன்...
களங்கமில்லாத எங்கள் நட்பை
களங்கப்படுத்தியதற்காக இல்லை...

படித்த இளைஞன் நீ!
நாகரிங்கள் பல அறிந்தவன்!
படிப்பில் பல நாகரிங்களை கற்றறிந்தவன்...!
நாகரிகமென்று பல புதுமை
உடைகளை உடுத்துபவன்...!

நாகரிகமென்று சிகரெட்டில் சிக்கியவன்...!
நாகரிகமென்று தண்ணியில்(குடியில்) தத்தளித்தவன்...!
நாகரிக சிந்தை மட்டும் உன்னிடம் இல்லையோ!
நட்பையும்,காதலையும் பிரித்தறியாத மூடனாய்...
நீ இருக்கிறாய் என்ற மனவருத்தத்தில் மட்டுமே!

நித்தமும் உன் நினைவுடன்...!

நித்தமும் உன் நினைவே!
நீயின்றி ஏது வாழ்வு கண்னே!
நீ சொன்ன வார்த்தைகள் இவை
நிஜமென்று நான் நினைத்தேன்...
நீயோ வேறொருத்தியுடன்..
நானோ! நித்தமும் உன் நினைவுடன்...!

டைரி! என் உன்னத! உயரிய தோழி!

மனம் அயர்ந்து வரும் வேளைகளில்...
உன்னிடம் கொட்டி அழும்போது
ஆறுதலாய் இருக்கிறது!

மனம் குழம்பி வரும் வேளைகளில்...
உன்னிடம் கூறும்போது
தீர்வு கிடைக்கிறது!

மனம் மகிழ்ச்சி பெறும் தருணங்களில்...
உன்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது
குதுகலமாய் இருக்கிறது!

மனதின் ரகசியங்கள் சுமையாகும் வேளைகளில்...
உன்னிடம் பகிரும்போது
சுமைகள் லேசாகிறது!

என் இன்ப,துன்பங்களில் பங்கெடுக்கும்
"நீயே" என் உன்னத! உயரிய தோழி!

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்?

காதலை மறக்க தேவதாஸ்களாய்
மாறுபவர்களுக்கு தெரிவதில்லை...

காதல் நினைவுகளே!
சுகமாய்தான் இருக்கிறது! என்று

காலமெல்லாம் வாழ
காதலில் வாழ்ந்த சுகமான
நினைவுகள் போதுமே!

ஏன் மறக்க நினைகிறார்கள்....?

பார்க்காத காதல்!

விழிகள் நான்கும் கலக்காமலே
காதல் நுழைந்தது எவ்வழியே!
உயிரே! தெரியவில்லையே!

தூது போகும் குறுந்தகவலில்
என் மனதின் உன் நினைவுகளை
பதிக்கின்றேன்!

சிணுங்கும் "அலைபேசியில்" "நீ"யோ
என்று பார்க்கும் போது...
மனதில் மின்னல் வெட்டுகிறது!

நீ இல்லாமல் ஏமாறும் தருணங்களில்
அன்பான என் வார்த்தைகளில்
அலட்சியத்தை சந்திக்கிறது! எதிர்முனை!

மறக்க தான் நினைக்கின்றேன்...

மறக்க தான் நினைகின்றேன்!
அவனின் நினைவுகளை!
ஆனாலும்,
புல்லின் மேல் ஒற்றை பனித்துளியாய்
இதயத்தில் அவனின் நினைவுகள்
நின்று கொண்டுதான் இருக்கிறது...!

பிரிந்த ஆண்!, பெண் நட்பு!

ஊர் உனக்கும், எனக்கும் காதல் என்று பேசியதால்,
உன் நட்பெனும் உறவை முறித்துக்கொண்டேன்...
ஆனால்,
என் மனதின் அடிச்சுவட்டில் நம் களங்கமில்லாத
நட்பின் அடையாளங்கள் மறையவில்லை நண்பனே!

ஒரு தலை காதல்!

இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......

கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......

பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......

நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...

காதல்...

காதல் பொய் என்று நினைத்தேன்!
என்னை காதல் தாக்காதவரை...

அழகு,பணம் காதலுக்கு காரணம்
என்று நினைத்தேன்!

என்னை காதல் ஆட்கொள்ளாதவரை...

காதல் எதையும் எதிர்பார்க்காத
வர்ணிக்க வார்த்தையில்லாத உணர்வு
என்று இன்று நினைக்கிறேன்!

உன் நினைவுகள்...

அன்பே!
நான் இறந்த பிறகு
என் இதயத்தை பார்...
உன் நினைவுகள் மட்டுமே!
பதிந்திருக்கும்!
நம் காதல் மொழியால்...

காதல் இசை!

ஹார்மோன்கள் மீட்டும்
ஹர்மோனியமோ!
காதல் இசை....!

காதல் வர காரணம்...

காதல் வருவதற்கு,
கண்கள் தான் காரணம் என்று
கண்களை குருடாகினேன்...!

இசை தான் காரணம் என்று
செவிகளை செவிடாகினேன்...!

வார்த்தைகள் தான் காரணம் என்று
வார்த்தைகளை ஊமையாக்கினேன்...!

சுவாசம் தான் காரணம் என்று
சுவாசத்தை நிறுத்தினேன்...!

ஆனாலும்,
இதயம் துடிக்கின்றது ...
காதல்!...காதல்!...காதல்!... என்று...

சொல்லாத காதல்!

இரு விழிகளில் தொடங்கி
இரு இதயங்கள் ஒன்றாவது காதல்...
என் காதலோ என் இதயத்தில் தொடங்கி
என் இதயத்தில் சமாதி ஆகிறது...!