Friday, December 3, 2010

வெள்ளை காகிதம்!

வெள்ளை காகிதமாயிருந்த
என் உள்ளத்தை
உன் காதலால்
காவியமாக்கிவிட்டாய்...

மௌனத்தின் மொழி!

அன்பே!
உன் மௌனத்தின்
மொழியாகிட
ஆசை!

Thursday, December 2, 2010

கருமேகங்கள்...

காதலன் மேல்
ஊடல் கொண்ட
கவலையால்
கறுத்து கண்ணீர்
மழை சிந்துகிறதோ!

காதல் பூத்திட்ட தருணம்!

பார்க்கும் முகமெல்லாம்
புதியதாய் பார்க்கும் பிரமிப்பு!

கேட்கும் குரல்களையெல்லாம்
எங்கோ! கேட்கும் பிரதிபலிப்பு!

அறிந்த இடத்திற்கு சென்றாலும்
அறியாமல் நுழைந்த முழிப்பு!

அறியாமலிருந்த 'நீ' மட்டும்
அறிந்தது போல் முத்தாய்ப்பு!

விக்கல்

நிற்காத விக்கல்
எனக்கு
நீர் அருந்து என்றாள்
அன்னை
அருந்தியும் நிற்கல!

உன்னை நினைப்பார்கள்
யாராவது
அவர்களை நினை
என்றாள்

உறவுகளை நினைத்தேன்
நிற்கல!
உன்னை நினைத்தேன்
நின்றது..

காட்சிப்பொருளா!

பெண்பார்க்கும் படலம்
பார்த்ததும் பிடித்து
விட்டதாம்...
பொருத்தம் பொருந்தாமல்
போய்விட்டதாம்...

வாழப்போகிறவளை
விட்டுவிட்டு
அன்னையின் எதிர்பார்ப்பு
தந்தையின் எதிர்பார்ப்பு
சகோதரனின் எதிர்பார்ப்பு
என்று வழிவிட்டு
இவளின் கனவுகள்
நசுங்கிவிட்டது!

உருப்படாத ஜாதிபார்ப்பில்
உட்பிரிவு ஜாதியாம்
உடன்பாடில்லை
உடைந்திடும்
இதயங்கள்...

ஒப்பற்ற அழகில்
ஒரு சிலையென
இருந்தாலும்
ஒரு குறை காண்பித்து
ஒடுக்கப்படும்
இதயங்கள்

விணான பதார்த்தத்தில்
நசுக்கப்படும்
இவளின் ஆசைகளும்
வீணாய்
குப்பை கூடையில்

பெற்றோர்கள் பெண்ணை
காண்பிக்க
மற்றோர்கள் பார்த்து செல்ல
உணர்ச்சியற்ற காட்சிப்பொருளா
பெண்...!

ஜன்னலோர இருக்கை

பேருந்து பயணம்
சுகமே!
ஜன்னலோர
இருக்கை பயணம்
சுகமோ! சுகம்!

எனக்கு,உனக்கு
என்று செல்ல
அடிதடி யுத்தம்
ஜன்னலோரத்திற்கு...

முன்னால் பின்னால்
முட்டி மோதி
மூச்சு முட்டினாலும்
'ஜில்' சுவாசம்
ஜன்னலோரதிலே!

நகர்திடும் மரங்களையும்
பறந்திடும் பறவைகளையும்
முகத்திலடிக்கும் காற்றையும்
முகர்ந்து ரசிப்பது
ஜன்னலோரதிலே!

மழை நாளில்
தெறிக்கும் சாரலை
இசைக்கும்
மெல்லிசையில் சுகிப்பது
ஜன்னலோரதிலே!