Tuesday, March 29, 2011

வளையல்...!

வளைந்திடும் நாகரிகத்தில்
வளையாமல் வளையல்
விதவிதமாய் வளையலில்
விலகாமல் மனம்

அலமாரியெங்கும் அடுக்கினாலும்
ஆசை தீரவில்லை
ஒவ்வொரு அசைவிலும்
அழகாய் இசைக்கிறது

இசை இசைதிடும்
பெருமை அளிக்கிறது
என் ஒவ்வொரு அசைவினில்

அசையாமல் கண்டு
அடுக்கிய வளையலின்
அழகினில் ஆழ்கிறேன்

வளையளினூடே
வளைந்து செல்கிறது
அவனின் நினைவுகளும்
வண்ண கனவுகளாய்

காமநாடக காதல்

கண்டதும் காதல்...
காணாத காதல்...
கனவு காதல்...
புரிந்த காதல்...
புரியாத காதல்...

காதல் வகைகளில்
அங்கம் பிடித்திருக்கிறது
காமசுவை பருகிட
காதலின் அவமான சின்னமாய்
காம நாடக காதல்...

காமத்தின் முகவரி
காதல் சிலருக்கு
அவளின் அன்பினில்
திளைப்பது போல்
அங்கங்களை ருசித்திட
அன்பு நாடகம்

நேசத்தை நாசமாக்கிட
நாசமானவன் போட்டிடும்
நேச வேஷங்கள்
காம சுவைக்கு
காதல் துருப்புச்சீட்டு

காதலில் விழும்முன்
காதல் தேவனா!
காதல் நாடகமாடிடும்
காம தேவனா!
அறிந்து விழுந்திடுவீர்..
அழகு நங்கைகளே!

முகப்பரு

பொலிவான முகத்தில்
அழகான முத்தாய் பூத்திட்டாலும்
அழகை கெடுத்திடும் அரக்கனென்று
அமைதியில்லாமல் மனம்

அழித்திடும் முயற்சியில்
ஆயிரம் முறை தோற்றாலும்
அசராமல் அடுத்த படையெடுப்பு!

பருவ வயதில் பருவால்
அல்லோலப்பட்டாலும்
காதலில் விழுந்திட்டாயா!
சைட் அடித்தார்காளா!

என்ற தோழிகளின் சீண்டலை
மனம் நாணி
ரசித்திட மறுப்பதில்லை...!!!

Monday, March 7, 2011

திரும்பிவிடு என் மனமே!

சென்ற மனமே!
திரும்பிவிடு...

செல்லா காசாகிவிட்டது
உன் அன்பு...

திரும்பிட என்னடி
மறுப்பு!

தீராக்காதலின்
மயக்கமோ!

திறக்காத மனக்கதவின்
முன் ஏன் தவம்

திரும்பிவிடு என்னிடமே!
என் மனமே!

மறந்திடும் வழி சொல்வாயோ!

ஏமாற்றத்தின் வலி அறிந்தும்
என்னை ஏமாற்றியது ஏன்..?

மறந்துவிடு என்று சொல்லும்
முன்

மறந்திடும் வழி
சொல்வாயோ!

கோபம் வெளிப்பட மறுக்கிறது...

அன்பே!
உன் மீது கோபமும், வெறுப்பும்
உண்டாகிறது...
நான் வெறுப்பது உன் தவறுகளை
மட்டுமே!
உன்னை வெறுக்க முடியவில்லை
அதனாலோ! உன் மீது
கோபம் வெளிப்பட மறுக்கிறதோ!

விலகலும் சரியே!

காதலின் அம்சம்
புரிதல்...

புரிதல் இல்லா காதலுக்கு
ஏன் சாதல்...

புரிதல் இல்லா காதலில்
சிக்கல்

சிக்கல் தொலைத்திட
சிறந்தது விலகல்...