Monday, September 6, 2010

எங்கே காதல்...

காதல்... காதல்... காதல்...
எங்கே காதல்...

உள்ளத்தின் உணர்வுகளில்
உண்மையான காதலுக்கு
ஜாதி ஏற்படுத்திடும் தடை
மாறிவிட்டது...

ஐஸ்கிரீம் ஒன்றில்
இருவர் உண்கிறார்கள்
உருக, உருக
உருகிவிடுகிறது காதல்...

அலைபேசியில் அசைபோட்டிடும்
காதல் அலையாய்
அலைவரிசையிலே
கரைந்துவிடுகிறது காதல்...

பர்ஸ் இருந்தால் பாசமாய்
பேசிடும் சில பாவையர்கள்
பர்ஸ் காலி என்றவுடன்
பறந்துவிடுகிறது காதல்...

பிகரென்று பின்னால்
அலைந்திடும் காதலன்
பிசிறில்லாத அழகுடன்
இன்னொருத்தி கிடைத்தால்
பிய்த்துக்
கொள்கிறது காதல்...

தகதகவென தங்கத்தை
தாங்குபவளிடம் தடுமாறுகிறான்
தங்கம் தனக்கில்லை
தாலி போதும்
கட்டிய புடவையுடன் வந்தால்
தாவி விடுகிறது காதல்...

பளபளப்பாய் இருப்பவளிடம்
பாசத்தை காட்டி
காமக்களியாட்டம் நடத்தி
பாவையின் உயிரை
பறித்துவிடுகிறது காதல்...

விளையாட்டாய் பொழுதுபோக்காய்
காதல் சொல்லி விளையாட்டிற்கு
சொன்ன காதல் என்று
மனதிற்கு விஷம் கொடுத்து
கொன்று விட்டு
விலகிவிடுகிறது காதல்...

இதுதான் இன்றைய காதலோ!
நான் பேச நினைத்ததை
நீ பேசியது அப்பொழுது!
எங்கே காதல் என்று
தேடிடும் காதல் இப்பொழுது!

No comments:

Post a Comment