Tuesday, September 21, 2010

காதல் காப்பாற்றப்படட்டும்...

என் உள்ளத்தில் காதல் என்பது
இருவரும் ஒவ்வொருவரின்...
மிகை குறை புரிந்தே!
புரிந்ததின் பால் ஈர்த்து,ரசித்தே!
விட்டுக்கொடுத்து வாழ்வதே!

கல்லூரி சென்றாலே!
காதலிக்க வேண்டும் என்றே!
கௌரவ பிரச்சனையாகி விட்டதே!
காதலை புரிந்து கொள்ளாமல்
கண்டதும் காதல்...
காசிருப்பவர்களிடம் காதல்..

காலம் சில கடந்தும்
கலகம் கண்டு...
காதலா! இல்லையா! என்றே!
தெரியாமலே!
இழுத்து பிடித்து நிறுத்தி...
இருவரில் ஒருவர்
மட்டுமே! தியாகம்...

காதல்! காதல்! என்றே!
கல்யாணமும் கண்டு...
கனிவு மறைந்து....
காதல் கசந்து...
கச்சேரி படியேறி!
காதலுக்கு(விவாகரத்து) பிரிவு!

காதல் திருமணமோ!
நிச்சயித்த திருமணமோ!
சேர்வது இருமனம் தானே..!..?
இருவகை மணத்திலும்...
இருமனங்களில் காதல் மலர்ந்து
மணம் வீசிட வேண்டுமே!

காசிற்க்கோ! கௌரவத்திற்க்கோ!
அழகிற்க்கோ! இன்னும் எதெற்க்கோ!
காதலில் விழுந்து...
பின் தோல்வியும் கண்டு...
அன்பெனும் பாலத்தால்...
இணையும் காதலை
அசிங்கப்படுத்தாதீர்!

காதல் தொடங்கிய பின்
ஒரு மனதில் வாழும் காதலை!
ஒருதலை காதலை!
புரிய வைத்திடுங்கள்...

இருவரில் ஒருவரின்
உள்ளத்தில் காதலிருந்தால்
உள்ளத்தில் வாழட்டும்...
உங்களை பிடிக்காதவரை
பிடிவாதத்திற்க்காக பிடித்து
வைக்காதீர்....

இருவரின் உள்ளங்களிலும்
காதலில்லை என்றறிந்த
பின்பே! பிரச்சனைகளுடன்
பிடிமானம் வேண்டாம்...!

முடிந்தால் காதலை
புரிந்து கொள்ளுங்கள்...
இல்லை என்றால்
பிரிந்து கொள்ளுங்கள்...
காதலின் புனிதம்
காப்பாற்றப்படட்டும்...!

No comments:

Post a Comment