Monday, September 27, 2010

விட்டு விடு என்னை!

விட்டு விடு என்னை!
விட்டு விடு என்னை!
விலகி செல்கிறேன்!
உன்னை விட்டு!

என் இதய தோட்டத்தில்
விலகாமல் சிறகடித்து
என் மனதை கவர்ந்து
சிறைபிடிக்காதே! கள்வனே!

விலகி செல்கிறது உடல்
விலகாமல் என் மனம்!
விட்டு விடு....
என் மனதினை!

விடுதலையை விரும்பாமல்
விடுதலை கேட்கிறது...
என் மனம்...
விட்டு விடு என்மனதினை!

1 comment:

  1. அக்காதலன் கொடுத்து வைத்தவன் அருமை வாழ்த்துகள்

    ReplyDelete