Wednesday, October 6, 2010

நவீனமான தவறுகள்... ஏனோ? இளைய பட்டாளமே!

இளைய பட்டாளங்களே!
இளமையின் முருக்கில்...
குறும்பு செய்திடும் வயது தான்...
குறும்பில் தவறுகள் ஏனோ?
தவறுகளில் நவீனத்தை
கலந்து கலாச்சாரத்தை
காணாமல் செய்துவிடுவீர்களோ!

பெண் விடுதலை என்பதை
ஆடை விடுதலை என்றே!
தவறாக சிலர் எடுத்துவிட்டார்களே!
கையில்லாத சட்டையும்...
குட்டை பாவாடையும்...
கைகுட்டையில் ஆடையணிந்து
கண்ணியத்தை குறைத்து
பெண்மையை தாழ்த்துவது ஏனோ!

அலைபேசி பட்டி, தொட்டி
எங்கும் அலைகிறது...!
எவ்விடத்திலும் தொடர்பு
கொள்ள கண்டறிந்தது..!
எட்ட உறவை
கிட்ட நிற்க்கச் செய்யும்...

சில இளைய படைகளுக்கு
ஆபாச எஸ்.எம்.எஸ்...
ஆபாச வீடியோ...
என்றே! தவறுகளின்
சிறிய பெட்டகமாக ஆகிவிட்டதே!

பேருந்து நெரிசலில்
ஆடை சரிவதையும்...
குனிந்து கோலம்
போடும் பெண்களையும்...
சிறிது கவனக்குறைவால்
ஆடை விலகிடும் பெண்களையும்...

அலைபேசியில் படம்பிடித்து...
உடனுக்கு உடனே உலகம்
முழுதும் பரப்பிடும்
தொலை தொடர்பு சாதனம்
தொல்லைத்தொடர்பு சாதனமே!

எங்கேயோ? பெண்களின்
அலைபேசி எண்...
இணைய முகவரி பெற்று
ஹாய் சொல்லி ஆரம்பித்த நட்பில்
மெல்ல, மெல்ல ஆபாச
வார்த்தைகளை அனுப்பிவிடுவது...

காதலும் சொல்லி...
விளையாட்டு காதல் என்றே!
வீணாய் மனதை காயப்படுத்துவது...
நல்லவர்கள் போல் நடித்தே!
காணாமலே காதல் சொல்லி...
கண்டபின் காமக்
களியாட்டம் நடத்துவது...
ஏன் இளைஞர்களே!

வெட்டலும், ஓட்டலும்
சாதாரணமாகிவிட்டது...!
கண்ணியமிக்க பெண்ணின்
கௌரவத்தை சிதைக்க...
கணினியில் காமப்படத்தில்
முகத்தினை பதித்து
இணையத்தில்...
உலவ விடும் தவறில்

மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்
மானங்கெட்ட...!
சில இளைய
சமுதாயம் திருந்திடுமோ!

2 comments:

  1. நன்றாக உள்ளது. எல்லா ஆண்களும் அப்படி இல்லை. அனால் ஆண்கள் மற்றும் பெண்களில் சிலர் அப்படி உள்ளார்கள் என்பதே உண்மை.

    ReplyDelete
  2. நன்றி பழனிவேலன்...
    பெண்களிலும் சிலர் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்... ஆண்களில் சில நல்லவர்கலும் இருக்கிறார்கள்... அதையும் ஏற்றுக்கொள்கிறேன்...

    ReplyDelete